search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி விழா - தஞ்சையில் 108 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை
    X

    விநாயகர் சதுர்த்தி விழா - தஞ்சையில் 108 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

    தஞ்சையில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட முழுவதும் 108 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது.
    தஞ்சாவூர்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி வருகிற செப்டம்பர் மாதம் 13-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் விநாயகர் சதுர்த்தி அன்று தங்கள் பகுதிகளில் முக்கிய இடங்களில் பெரிய அளவில் உள்ள விநாயகர் சிலைகளை வைத்து வணங்குவதற்காக பல்வேறு இந்து அமைப்பினர் அதற்கான பணிகளை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரன் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தஞ்சையில் 108 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து விமரிசையாக ஊர்வலம் நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்காக 9 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் தஞ்சை மாநகர் மாவட்டத்தில் உள்ள 51 வார்டுகளிலும் கிளை கமிட்டி அமைக்க வேண்டும். கல்லூரிகளில் இந்து இளைஞர் முன்னணி அமைக்க வேண்டும். சிலை கடத்தல் வழக்குகளில் நேர்மையாக செயல்பட்ட ஐ.ஜி.பொன்மாணிக்க வேலை இடம் மாற்றம் செய்ய கூடாது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×