search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆடிக்கிருத்திகை விழா - திருத்தணி கோவிலில் பக்தரிடம் ரூ.1 லட்சம் கொள்ளை
    X

    ஆடிக்கிருத்திகை விழா - திருத்தணி கோவிலில் பக்தரிடம் ரூ.1 லட்சம் கொள்ளை

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவில் கூட்டத்தை பயன்படுத்தி பக்தரிடம் ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நடந்து வருகிறது. நேற்று மாலை முதல் நாள் தெப்ப திருவிழா நடந்தது. இதையொட்டி திருத்தணி கோவிலில் 1 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் வந்திருந்தனர்.

    நேற்று மாலை பெங்களூரை சேர்ந்த பக்தர் ராஜானித் என்பவர் மூலவரை தரிசிப்பதாக வரிசையில் நின்றார். அப்போது கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

    இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள் ராஜானித் கால்சட்டை பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை பையுடன் அறுத்து திருடிச் சென்று விட்டனர்.

    பணம் கொள்ளை போயிருப்பதை அறிந்த ராஜானித் கூச்சலிட்டார். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து திருத்தணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பெங்களூரை சேர்ந்த செல்லம்மாள் என்பவர் நேற்று மாலை மலைக் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்லமாள் அணிந்திருந்த 5½ பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து தப்பினர்.

    ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி குற்றச் செயல்களை தடுக்க திருத்தணி நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும் கொள்ளையர்கள் பக்தர்களிடம் கைவரிசை காட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெப்பத்திருவிழா இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.

    பக்தர்கள் போல் புகுந்துள்ள நகை பறிப்பு, கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சோழிங்கநல்லூரை அடுத்த ஒட்டியம்பாக்கம் ஊராட்சியில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா நடை பெற்றது.

    அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் வந்தனர். அந்த பகுதியை சேர்ந்த முனியம்மாள்(75) என்ற மூதாட்டியிடம் 3 சவரன் தங்க செயின், கற்பகம்(46) அணிந்திருந்த 6 சவரன் தங்க செயின் என 9 சவரன் தங்க செயினை கூட்டத்தில் பறிகொடுத்தனர்.

    அம்மனை வழிபட்டு கொண்டிருக்கும்போது இருவர் கழுத்தில் இருந்து தங்க சங்கிலிகள் கொள்ளையடித்துள்ளது தெரியவந்தது.

    இது குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×