search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கோவில் திருவிழா
    X

    ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கோவில் திருவிழா

    ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கோவில் திருவிழா வருகிற 29-ந் தேதி இரவு நடக்கிறது.
    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகேயுள்ள மலையாம்பட்டி கிராமத்தில் உள்ள ஆலமரத்தடியில் மலையாள தெய்வம் ஸ்ரீ பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கட்டிடம் மற்றும் கோபுரம் எதுவும் இல்லை. ஆலமரத்தடியில் சாமி சிலைகள் மட்டுமே உள்ளன. இக்கோவில் திருவிழா வருகிற 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.

    பெண்கள் கலந்து கொள்வதில்லை. விழாவில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற 150-க்கும் மேற்பட்ட கிடாக்களை பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்த உள்ளனர். பலியிடப்பட்ட ஆட்டு இறைச்சியை பொங்கலுடன் பக்தர்களுக்கு வழங்குவார்கள்.

    இந்த சமபந்தி விருந்தில் மலையாம்பட்டி, ராசிபுரம், புதுப்பட்டி, வடுகம், சீராப்பள்ளி, பட்டணம், நாமகிரிபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அனைவருக்கும் இறைச்சியுடன் சமபந்தி விருந்து வழங்கப்படும் என்றும் விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மக்கர்த்தாக்கள் சுப்பிரமணியம், ஆனந்த், சுப்பிரமணி மற்றும் விழாக் குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×