search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட புஷ்பா
    X
    கொலை செய்யப்பட்ட புஷ்பா

    திருக்கோவிலூர் அருகே கர்ப்பிணி பெண் கொலை- மும்பை கூலிப்படையினர் தொடர்பா?

    திருக்கோவிலூர் அருகே கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மும்பை கூலிப்படையினருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அருதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 35). இவரது மனைவி புஷ்பா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு பெனித்தா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

    தற்போது புஷ்பா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் புஷ்பா அருகில் உள்ள விவசாய பம்பு செட் கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது அவர் கொலை செய்யப்பட்டார். கரும்பு தோட்டத்தில் புஷ்பா பிணமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி விரைந்து சென்று விசாரணை நடத்தினார். புஷ்பா கழுத்தில் துண்டால் இறுக்கி சகதியில் முக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    மேலும் அவர் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து ராமதாஸ் வீட்டுக்கு சென்று படுத்துக் கொண்டது.

    இதனால் போலீசாருக்கு ராமதாஸ் மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தன. ராமதாசுக்கும், புஷ்பாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    புஷ்பா தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் புஷ்பா வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டார் என்பதும் தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் புஷ்பாவின் கணவர் ராமதாஸ், மாமனார் தேவநாதன், உறவினர் சந்தோஷ் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ராமதாஸ் வைத்திருந்த செல்போனையும் போலீசார் கைப்பற்றினர்.

    ராமதாஸ் செல்போனில் யார்-யாரிடம் பேசியுள்ளார் என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    மேலும் ராமதாஸ் மும்பையில் கூலி வேலை பார்த்து வந்ததாகவும், ஊருக்கு வரும்பேதெல்லாம் மனைவியிடம் தகராறு செய்ததும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து மும்பையை சேர்ந்த கூலிப்படையினரை வரவழைத்து அவர்கள் மூலம் புஷ்பாவை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் நேற்று இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திருப்பாலபந்தல் போலீஸ் நிலையத்துக்கு நேரில் வந்து 2 மணி நேரம் விசாரனை நடத்தினார்.

    விசாரணையில் ஏதும் முன்னேற்றம் காணப்பட்டதாக தெரியவில்லை. அதனை தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன் மற்றும் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ், ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×