search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில், 21-ந்தேதி தொடர் முழக்க போராட்டம் தா.பாண்டியன், பழ.நெடுமாறன் பங்கேற்பு
    X

    தஞ்சையில், 21-ந்தேதி தொடர் முழக்க போராட்டம் தா.பாண்டியன், பழ.நெடுமாறன் பங்கேற்பு

    தஞ்சை ரெயில் நிலையம் முன்பு வருகிற 21-ந்தேதி தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது. இதில் தா.பாண்டியன்,பழ.நெடுமாறன் பங்கேற்கின்றனர்.

    தஞ்சாவூர்:

    அனைத்துக்கட்சிகள் மற்றும் இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் அருணாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் துரை.மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அயனாபுரம் முருகேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சை ரெயில் நிலையம் முன்பு வருகிற 21-ந்தேதி தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பால கிருஷ்ணன், தமிழர் தேசிய முன்னணி மாநில தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் அனைத்துக் கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.

    தமிழகத்தில் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மக்கள் பிரச்சினைக்காக போராடும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். இது கண்டனத்துக்கு உரியது.

    தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தும் மக்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையை காவல் துறை உடனே கைவிட வேண்டும். தமிழகத்தில் இயற்கை வளத்தை அழித்து மக்களை பாதிக்க வைக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு துணை போகிற திட்டங்களை அனுமதிக்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×