search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையில் லேசான ரசாயன கசிவு - ஆட்சியர் சந்தீப் நந்தூரி
    X

    ஸ்டெர்லைட் ஆலையில் லேசான ரசாயன கசிவு - ஆட்சியர் சந்தீப் நந்தூரி

    ஸ்டெர்லைட் ஆலையில் லேசான ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #Sterlite
    தூத்துக்குடி :
     
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் 100-வது நாள் கலவரம் வெடித்தது, கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதைத்தொடர்ந்து, ஆலையில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அதிகாரிகள் குழு ஸ்டெர்லைட் ஆலையில் கசிவு குறித்து ஆய்வு செய்ய உள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருந்தார்.

    சார் ஆட்சியர் தலைமையில் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் காவல்துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று மாலை முதல் ஆலையில் ஆய்வு செய்து முடித்துள்ளனர்.

    இந்நிலையில், ஆலையில் லேசான ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது அதிகாரிகள் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது என ஆட்சியர் கூறியதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. #Sterlite
    Next Story
    ×