search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் 16 இடங்களில் ரூ.2 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள்
    X

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் 16 இடங்களில் ரூ.2 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள்

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ரூ.2 லட்சம் செலவில் 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
    வேலூர்:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வேலூர் மாவட்ட செயலாளர் ஞானவேலு தலைமையிலான வணிகர்கள் எஸ்.பி. பகலவனை இன்று சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான 24 கடைகள் உள்ளன. அக்கடைகளில் ஓட்டல்கள், டீக்கடைகள், குளிர்பான கடைகள் மற்றும் பயணிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படுகிறது.

    இந்த நிலையில் 24 மணி நேரமும் இயங்கி வந்த அந்த கடைகளை, திடீரென இரவு 11 மணிக்கு மேல் மூட வேண்டும் என்று போலீசார் மிரட்டுகின்றனர்.

    இதனால் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை அடைத்துவிடுகிறோம். எங்கள் கடைகளுக்கு மாத வாடகை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை செலுத்தி வருகிறோம். இந்த பெருந்தொகை பஸ் நிலைய கடைகள் என்பதால் தான் செலுத்தி வருகிறோம்.

    தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகளில் உள்ள பஸ் நிலைய கடைகள் 24 மணி நேரமும் திறக்கப்பட்டுள்ளன. எனவே, வேலூர் மாநகர பஸ் நிலையத்தில் உள்ள கடைகளையும் 24 மணி நேரமும் திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேணடும்.

    ரூ.2 லட்சம் செலவில் 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துகிறோம் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட எஸ்.பி. பகலவன், 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கும் வணிகர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.

    மேலும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் உத்தரவிட்டார். எஸ்.பி.க்கு வணிகர்கள் நன்றி கூறினர்.
    Next Story
    ×