search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போடி அருகே கோவில் விழாவில்  மோதல்
    X

    போடி அருகே கோவில் விழாவில் மோதல்

    போடி அருகே கோவில் விழாவில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    போடி மேலசொக்கநாத புரத்தில் ஸ்ரீமதுகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

    சம்பவத்தன்று அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து வரும் போது அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி, போலீஸ்குமார், ஒண்ணப்பன், வேல்முருகன், முப்பிடாதி முத்து உள்பட 8 பேர் அந்த பெண்களிடம் எங்கள் சமுதாயத்தை சேர்க்காமல் நீங்கள் மட்டும் எப்படி திருவிழா நடத்தலாம்? என்று கூறி தகராறு செய்தனர்.

    மேலும் எதிர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர் குணமணியிடம் தகராறு செய்து தாக்கினர். மேலும் இதை தடுக்க வந்த எதிர் தரப்பைச் சேர்ந்தவர்களையும் தாக்கி ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து போடி தாலுகா போலீசில் குணமணி கொடுத்த புகாரின் பேரில் குருசாமி, முப்பிடாதி, வேல்முருகன் உள்பட 8 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதே போல முப்பிடாதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பவுன்ராஜ், மோகன், குணமணி உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.

    Next Story
    ×