search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒக்கி புயலின் போது தென்னை மரம் விழுந்து காயம் அடைந்த பெண் பலி
    X

    ஒக்கி புயலின் போது தென்னை மரம் விழுந்து காயம் அடைந்த பெண் பலி

    ஒக்கி புயலின் போது தென்னை மரம் விழுந்து காயம் அடைந்த பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    ஒக்கி புயலின் போது குமரி மாவட்டத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஏராளமான மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தது. மரங்கள் விழுந்ததில் பலர் உயிர் இழந்து உள்ளனர். மேலும் இந்த புயலால் விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்தனர்.

    நாகர்கோவில் பழவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராஜசுலோக்சனா(வயது43). இவர் ஒக்கி புயலின் போது தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு அருந்த தென்னை மரம் புயலில் முறிந்து ராஜசுலோக்சனா மீது விழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ராஜசுலோக்சனாவின் உடல் நிலை மோசமானது. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×