search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை- காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பதவி பறிப்பு: தினகரன்
    X

    சென்னை- காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பதவி பறிப்பு: தினகரன்

    சென்னை - காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் பதவிகளை பறித்து புதிய நிர்வாகிகளுக்கு டி.டி.வி. தினகரன் பொறுப்பு வழங்கி உள்ளார்.
    சென்னை:

    சென்னை - காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் பதவிகளை பறித்து புதிய நிர்வாகிகளுக்கு டி.டி.வி. தினகரன் பொறுப்பு வழங்கி உள்ளார்.

    துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தென்சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் இரா.தெய்வேந்திரன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

    ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் பொறுப்பில் தாம்பரம் நாராயணன் (தாம்பரம் கிழக்கு பெரியாழ்வார் தெரு) நியமிக்கப்படுகிறார்.

    காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக பட்டேல் நகர் வி.எஸ்.சத்யா நியமிக்கப்படுகிறார்.

    தாம்பரம் நகர இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளாக கல்யாண் நகர் முருகேசன், நகரச் செயலாளராகவும், இணைச் செயலாளராக சாய்நாத், சேலையூர் பாரத் நகர் சீனிவாசன் ஆகியோரும் துணைச் செயலாளராக சரவணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளராக உள்ள லியோ என்.சுந்தரம் விடுவிக்கப்பட்டு அந்த பொறுப்புக்கு செம்மஞ்சேரி குணசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பகுதி இணைச் செயலாளராக இருந்த பிரேமலதா மாற்றப்பட்டு அந்த பதவிக்கு துரைப்பாக்கம் நிர்மலா நியமிக்கப்பட்டுள்ளார்.

    பரங்கிமலை ஒன்றிய துணைச் செயலாளர் அகரம் ஜானகிராமனின் பதவி பறிக்கப்பட்டு அப்பதவிக்கு மூவரசம்பட்டு திருவேங்கடம் நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணனுக்கு பதில் பெரும்பாக்கம் பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆலந்தூர் பகுதி இணைச் செயலாளர் ஆஷா பாஸ்கர் மாற்றப்பட்டு ஆதம்பாக்கம் செல்வி ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பொருளாளராக உள்ள பாலகிருஷ்ணனுக்கு பதில் மணப்பாக்கம் தீனதயாளனும், துணைச் செயலாளராக மார்க்கெட் ஏழுமலையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஆலந்தூர் பகுதி இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பொறுப்பில் உள்ள கே.பி.கோபிநாத் இன்று முதல் பாசறை மாவட்ட செயலாளராகவும், பகுதிச் செயலாளராக சதீஷ்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஆலந்தூர் பகுதி 157-வது வட்ட செயலாளர் பாண்டியன், துணைச் செயலாளர் எம்.சுகுமார், மாற்றப்பட்டு புதிய வட்டச் செயலாளராக மணப்பாக்கம் சதீஷ்குமார், துணைச் செயலாளராக ஞானவேல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    161-வது வட்ட செயலாளர் வேம்பரசனுக்கு பதில் ஆலந்தூர் அன்பரசனும், 165-வது வட்ட செயலாளர் நரேஷ்குமாருக்கு பதில் வாணுவம்பேட்டை முருகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    காஞ்சி கிழக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருந்த அம்மன் பி.வைரமுத்து மாற்றப்பட்டு முன்னாள் கவுன்சிலர் வேம்பரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக குபேரா ஜெய்சங்கரும்,துணை செயலாளராக சண்முகம் சாலை வெங்கடேசனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளராக இருந்த அருள்கென்னடி மாற்றப்பட்டுள்ளார்.

    மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் மாற்றப்பட்டு துணைத் தலைவராக அர்ச்சுனன், இணை செயலாளர்களாக பல்லாவரம் கோகுல்ராஜ், மேடவாக்கம் சீனிவாசன், பொருளாளராக விஜய குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பல்லாவரம் நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டு புதிய அவைத் தலைவராக குரோம்பேட்டை கே.பி. ஆனந்தன், இணைச் செயலாளராக ராஜலட்சுமி, துணைச் செயலாளராக மைதிலி, பொருளாளராக மீரா மொய்தீன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நகர ஜெயலலிதா பேரவை செயலாளராக அஸ்தினாபுரம் முருகன், இளைஞரணி நகர செயலாளராக கீழ்கட்டளை குரு மூர்த்தி, நகர மாணவரணி செயலாளராக ராதாநகர் சதீஷ், அண்ணா தொழிற் சங்க நகர செயலாளராக மும்மூர்த்தி நகர் மகாராஜன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதே போல் தாம்பரம் நிர்வாகிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.

    நகர அவைத் தலைவராக முல்லைநகர் அருள்கென்னடி, துணைச்செயலாளராக மஞ்சுளா பிரகாஷ், மாவட்ட பிரதிநிதிகளாக மோகன்ராஜ், எஸ்.எஸ்.எஸ். சிவா நியமிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×