search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
    X

    பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொடுமைகளை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொடுமைகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட குழந்தைகள் நலன் பாதுகாப்பு அதிகாரி டி.கவிதா கூறினார்.

    கோவை மாவட்ட குழந்தைகள் நலன் பாதுகாப்பு அதிகாரி டி.கவிதா, தினத்தந்தி நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

    கேள்வி:-ஆதரவற்ற நிலையில் கைவிடப்படும் பச்சிளம் குழந்தைகளை காப்பாற்ற தொட்டில் குழந்தைகள் திட்டம் எங்கெல்லாம் செயல்படுத்தப்படுகிறது?

    பதில்:-பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் கோவை அரசு ஆஸ்பத்திரி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மற்றும் சூலூர் அரசு ஆஸ்பத்திரிகளில் தொட்டில்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த தொட்டில்களில் போடப்படும் ஆண், பெண் பச்சிளம் குழந்தைகள் பாதுகாக்கப் படுகின்றன.

    கேள்வி:- மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் பணிகள் என்ன?

    பதில்:- பாதுகாப்பும் பராமரிப்பும் இன்றி ஆதரவற்ற நிலையில் காணப்படும் குழந்தைகளை பராமரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது, இதற்கான குழந்தைகள் காப்பகங்களை முறைப்படுத்துவது, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பாலியல் வன்கொடு மைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளை மீட்டெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் உள்ளிட்டவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் முக்கியமான பணிகள் ஆகும்.

    கேள்வி:-குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதற் காக எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?

    பதில்:-பெண்களுக்கான திருமண வயது 18. ஆண்களுக் கான திருமண வயது 21. இந்த வயதுக்கு கீழ் நடத்தப்படும் திருமணங்கள் குழந்தை திருமணங்கள்தான். பெற்றோர் வேலைக்கு செல்வதற்காக, வீட்டில் பெண் குழந்தைகளை பாதுகாக்க முடியவில்லை என்பதற்காக சில நேரங்களில் குழந்தை திருமணங்களை நடத்த முயற்சிக்கிறார்கள்.



    இதுதவிரமேலும் பல காரணங்கள் உள்ளன. குழந்தை திருமணங்கள் மாவட்ட சமூக நல அதிகாரியின் தலைமையில் தடுத்து நிறுத்தப்படுகிறது. மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆலோசனைகள் வழங்கி மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப் படுகிறது. காவல்துறையினர் மூலமும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்ததிருமணத்தை நடத்த துணை நின்றவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. குழந்தைகள் திருமணம்நடைபெற முயற்சிகள் நடைபெற்றால் இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கலாம். கடந்த மாதம் கூட, ஒரு இடத்தில் குழந்தை திருமணத்துக்காக திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

    அந்த திருமணம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டதுடன் பெற்றோர் எச்சரிக்கப்பட்டு சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட வாலிபர் குற்றவாளி ஆவார். குழந்தை திருமணத்தை நடக்கச்செய்தவர், நடத்த தூண்டியவர், நெறிப்படுத்தியவர், நடத்தியவர் இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் ஆவார்கள். இது போன்ற வர்களுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப் படும்.

    பதில்:-குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்(போக்சோ) 2012-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    வன்புணர்வு பாலியல் தாக்குதலுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஆயுள்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட லாம். கடுமையான வன்புணர்வு பாலியல் தாக்குதலுக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக் கப்படலாம். பாலியல் தாக்குதலுக்கு குறைந்த பட்சம் 3 ஆண்டு முதல் 5 ஆண்டுவரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட லாம்.

    கடுமையான பாலியல் தாக்குதலுக்கு குறைந்த பட்சம் 5 முதல் 7 ஆண்டுவரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். பாலியல் தொந்தரவுகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். ஆபாசப்படம் எடுத்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதமும் ஒருமுறைக்கு மேல் பல முறை ஆபாசப்படம் எடுத்தால் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்க தற்போதைய சட்டப்பிரிவில் வழிவகை செய்யப் பட்டுள்ளது.

    குழந்தைகளை வேலைக்கு பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தி, கொடுமைப்படுத்துபவர்கள் மீதும் குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், அதுபோன்ற குழந்தைகள் மீட்கப்பட்டு காப்பகங்களில் சேர்க்கப்பட்டு கல்வி கற்க வசதி செய்து கொடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×