search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அதிகம் சம்பாதிக்கும் மனைவி மீது கணவரின் குற்றச்சாட்டுகள்
    X

    அதிகம் சம்பாதிக்கும் மனைவி மீது கணவரின் குற்றச்சாட்டுகள்

    பொதுவாக அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் மீது கணவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    * என்னை வேலையை விடச் சொல்லி கணவர் வற்புறுத்துகிறார். ஆனால் அவரது சம்பளம் மட்டும் குடும்பம் நடத்த போது மானதல்ல என்று நினைக்கிறீர்களா?

    ** ‘நான் கடினமாக உழைக்கிறேன். நிறைய சம்பாதிக்கிறேன். ஆனால் குடும்பத்தில் பிரச்சினை தீர்ந்தபாடில்லை’ என்று வருந்துகிறீர்களா?

    *** உங்கள் பிரச்சினைக்கு காரணம், நீங்கள் கணவரைவிட அதிகமாக சம்பாதிப்பதாக இருக்கலாம். நீங்கள் அவரைவிட அதிக சம்பளம் வாங்குவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கும், அதில் இருந்து தப்பிப்பதற்கும் வழிகள் உள்ளன.

    பதவி மற்றும் சம்பளம் போன்றவை வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்வதற்குத்தானே தவிர கர்வத்திற்கும், கவுரவத்திற்கும் உரியது அல்ல என்பதை இருவருமே உணர வேண்டும். சம்பளத்தை நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். இதை கணவருக்கு விளக்கிச் சொல்லுங்கள். நீங்களும் உணர்ந்து கொள்ளுங்கள்.

    ‘வாழ்க்கையில் முன்னேறிச்செல்வதற்கும், அனுபவிப்பதற்கும் பணம் தேவைப்படுகிறது. அதை முறைப்படி சம்பாதிப்பதற்காக வேலைக்குச் செல்கிறேன். கற்ற கல்விக்காக கிடைக்கும் பலன் அது. அதை விட்டுவிடச்சொல்வது சரியானதல்ல’ என்பதை கணவருக்கு உணர்த்துங்கள்.

    ‘நம் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய எனது சம்பளம் உதவியாக இருக்கும். தேவையின்றி அதை உதறித்தள்ளினால் நமது குடும்ப மேம்பாடு பாதிக்கப்படும்’ என்பதை எடுத்துச் சொல்லுங்கள். ‘நான் அதிகம் சம்பாதிப்பதை, கவுரவப் பிரச்சினையாக கருத வேண்டாம்’ என்பதை சொல்லாலும், செயலாலும் வலியுறுத்துங்கள்.

    பொதுவாக அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் மீது கணவர்கள் மூன்று விதமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.



    - அதிகம் சம்பாதிப்பதால் கர்வத்துடன் நடந்து கொள்கிறாள்.

    - கண்டபடி செலவு செய்கிறாள்.

    - தன்னை பற்றி கேள்வி கேட்க கணவருக்கு உரிமை இல்லை என்பதுபோல் நடந்துகொள் கிறாள்.

    இந்த மாதிரியான எண்ணங்கள் கணவருக்கு வந்துவிடாதபடி பார்த்துக்கொள்வது நல்லது.

    கோபம் தலைக்கேறும்போது பலரும் அவசியமற்ற வார்த்தைகளை பேசிவிடுகிறார்கள். மனைவியின் வாயை அடைக்க ‘அதிக சம்பளம்’ என்ற துருப்புச்சீட்டை கணவர் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. சம்பளம் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தாலும் அது உங்கள் குடும்ப முன்னேற்றத்துக்கானது என்பதை மட்டும் உணருங்கள். ‘அதிகம் சம்பாதிப்பதால் அதிக செலவு செய்வேன், அதை கேட்கக்கூடாது, நீங்கள் என்னிடம் கேட்டுக் கொண்டா செலவு செய்கிறீர்கள்’ என்பதுபோன்ற ஆணவ வார்த்தைகள் மனைவியிடம் இருந்தும் வெளிப்பட்டுவிடக்கூடாது.

    இந்த விஷயத்தில் கணவரும்- மனைவியும் எதிரெதிர் துருவமாக நில்லாமல், ஒருவர் மற்றவரது உணர்வுகளைப் புரிந்து நடக்க வேண்டும். உங்கள் கணவர், உங்கள் உணர்வுகளை புரிந்து நடக்க விருப்பமும், அக்கறையும் காட் டாதவராக இருந்தால் நீங்கள் வேலை மற்றும் அலுவலக விஷயங்களை வீட்டில் விவாதிப்பதை தவிர்க்க வேண்டும். ஊதியத்தை பற்றியும் பேச வேண்டாம்.

    மனதுக்குள் பூட்டி வைக்காமல் உங்கள் மனதில் உள்ள உறுத்தலை கூறி விவாதிப்பது நல்ல தீர்வைத் தரும். உங்கள் பேச்சில் குடும்ப அக் கறையும், முழுமையான தெளிவும் இருக்க வேண்டும். ‘தனது தேவைகளை ஊதாரித்தனமாக எண்ண வேண்டாம்’ என்பதையும், உங்கள் சம்பாத்தியம் எந்த வகையில் குடும்ப மேம்பாட்டிற்கு பக்கபலமாக இருக்கிறது என்பதையும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பக்குவமாக விளக்குங்கள்.

    பிரச்சினையாக கணவர் எதையாவது சொன்னால், அது தவறான புரிதல் என்றால், அவருக்கு தெளிவுபடுத்தினாலே தீர்வு கிடைத்துவிடும். பணம், முடிவெடுத்தல், வீட்டு வேலைகள் பற்றி உங்களுக்குள் தொடர்ச்சியாக சண்டை போட வேண்டியநிலை ஏற்பட்டால், கணவர்தான் பிரச்சினைக்கு காரணம் என்ற முடிவுக்கு வரவேண்டாம்.
    Next Story
    ×