search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும் வெள்ளரிக்காய்
    X

    சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும் வெள்ளரிக்காய்

    வெள்ளரிக்காய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தும். அதே சமயம், சருமத் துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கிட உதவிடும்.
    வெள்ளரிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. இது நம் உடலிலிருந்து தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுகிறது. வெள்ளரியை அரைத்து ஜூஸாக்கி உங்கள் சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள். இது சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றை உடனடியாக குறைத்திடும். சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்திடும். அதே சமயம், சருமத் துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கிட உதவிடும்.
     
    வெள்ளரியை பொடியாக நறுக்கி தண்ணீரில் ஊற வைத்திடுங்கள். சுமார் இரண்டு மணி நேரம் வரை ஊறிய பிறகு அந்த தண்ணீரை எடுத்து குடிக்கலாம். அந்த தண்ணீரில் அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீருடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்துமுகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போடலாம்.


     
    வெள்ளரியை தோல்நீக்கி பொடியாக நறுக்கி அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து கழுவிடலாம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இதனை செய்யலாம்.
     
    முகத்தில் தோன்றிடும் கரும்புள்ளியை நீக்க, ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். ஆப்பிளை தோல் சீவி ஆப்பிள் மற்றும் வெள்ளரி இரண்டையும் பாதியளவு அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த அந்த கலவையுடன் தேன் கலந்து ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திட வேண்டும். பின்னர் அந்த கலவையை முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் வரை காத்திருந்த பின்னர் கழுவிடலாம்.
     
    வெள்ளரிச்சாறு ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு டீஸ்ப்பூன் இரண்டையும் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து கழுவி விடலாம். இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால் இரட்டிப்பு பலன் உண்டு.
    Next Story
    ×