search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பஞ்சாப் ஸ்பெஷல் தாபா தால் தட்கா
    X

    பஞ்சாப் ஸ்பெஷல் தாபா தால் தட்கா

    நாண், சப்பாத்தி, பூரி, சாதத்துடன் சாப்பிட பஞ்சாப் ஸ்பெஷல் தாபா தால் தட்கா அருமையாக இருக்கும். இன்று இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம்பருப்பு - 200 கிராம்
    வெங்காயம் - 200 கிராம்
    தக்காளி - 100 கிராம்
    நெய் - 100 கிராம் (அல்லது தேவைக்கேற்ப)
    சீரகம் - 10 கிராம்
    காய்ந்த மிளகாய் - 10 கிராம்
    நறுக்கிய பூண்டு - 50 கிராம்
    கறுப்பு உளுந்து - 200 கிராம்
    மிளகாய்த்தூள் - 20 கிராம்
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - 10 கிராம்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நெய்விட்டு, சூடானதும், சீரகத்தையும் காய்ந்த மிளகாயையும் சேர்க்கவும்.

    சீரகம் பொரிந்ததும் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வெந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், உப்பு சேர்க்கவும்.

    அடுத்து அதனுடன் வேகவைத்த பருப்பை, சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×