search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ரவை சேமியா காய்கறி கிச்சடி
    X

    ரவை சேமியா காய்கறி கிச்சடி

    ரவை, சேமியா சேர்த்து கிச்சடி செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த கிச்சடியை எளியமுறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானப் பொருள்கள் :

    ரவை - ஒரு கப்
    சேமியா - 2 கப்
    சின்ன வெங்காயம் - 20 கிராம்
    பச்சைப்பட்டாணி - ஒரு கைப்பிடி
    கேரட் - 1 (சிறியது)
    இஞ்சி - ஒரு சிறு துண்டு
    பூண்டு - 2 பற்கள்
    பச்சை மிளகாய் - 2
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    கொத்துமல்லி இலை - ஒரு கொத்து
    எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்

    தாளிக்க :

    நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
    கடுகு
    உளுந்து
    கடலைப் பருப்பு
    சீரகம்
    முந்திரி
    பெருங்காயம்
    கிராம்பு - 1
    பிரிஞ்சி இலை - 1
    கறிவேப்பிலை



    செய்முறை :

    பச்சை பட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, கேரட், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும்.

    இஞ்சி, பூண்டு தட்டி வைக்கவும்.

    ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடானதும் ரவை, சோமியாவை தனித்தனியாக போட்டு சூடு வர வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

    அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு போட்டு வதக்கிவிட்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து கேரட், பட்டாணி சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டே கால் பங்கு  என தண்ணீர் விட்டு, உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் போட்டு கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

    கொதி வந்ததும் சேமியாவைப் போட்டுக் கிளறவும். அது பாதி வெந்து வரும்போது ரவையை சிறிது சிறிதாகக் கொட்டி கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். எல்லா ரவையையும் கொட்டிக் கிளறிய பிறகு எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான ரவை சேமியா காய்கறி கிச்சடி ரெடி.

    சேமியா பாதி வெந்த பிறகுதான் ரவையைச் சேர்க்க வேண்டும். இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தால் ரவை வெந்து சேமியா வேகாமல் போகும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×