search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சாதத்திற்கு அருமையான மிக்ஸ்டு வெஜிடபிள் தால்
    X

    சாதத்திற்கு அருமையான மிக்ஸ்டு வெஜிடபிள் தால்

    சாதம், புலாவ், தோசைக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த மிக்ஸ்டு வெஜிடபிள் தால். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசிப்பருப்பு - ஒன்றரை கப்,
    இஞ்சி - 50 கிராம்,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    பொடியாக நறுக்கிய காய்கறிகள் (காலிஃப்ளவர், கேரட், சிகப்பு முள்ளங்கி, பூசணி, பட்டாணி எல்லாம் சேர்த்து) - ஒரு கப்,
    எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 3,
    [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்.



    செய்முறை :

    பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியைத் தோல் சீவி, விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    ஒரு கடாயில் பாசிப்பருப்பை வாசனை வரும்வரை வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். (எவ்வளவு தளர்த்தியாக பருப்பு வேண்டுமோ, அந்த அளவு நீரை கொதிக்க விடவும்).

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டு வெடித்ததும், இஞ்சி விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் நறுக்கிய காய்கறிகள், பெருங்காயம், [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், உப்பு, கொத்த மல்லித்தழை சேர்க்கவும்.

    அதோடு வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து கொதிக்கும் நீரை விட்டு, மூடியால் மூடி 20 நிமிடம் வேக விடவும். நடு நடுவே கிளறிவிடவும். (தீயைக் குறைவாக வைக்கவும்).

    இப்பொழுது பருப்பும் காய்கறியும் சேர்ந்து வெந்திருக்கும்.

    கடைசியாக எலுமிச்சம்பழச் சாறை சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான மிக்ஸ்டு வெஜிடபிள் தால் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×