search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான வாழைக்காய் பொடிமாஸ்
    X

    சூப்பரான வாழைக்காய் பொடிமாஸ்

    வாழைக்காயில் பொடிமாஸ் செய்தால் அருமையாக இருக்கும். இந்த பொடிமாஸை சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டு சாப்பிட்ட அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    வாழைக்காய் - 1,
    வெங்காயம் - 2,
    இஞ்சி - சிறிய துண்டு,
    பச்சை மிளகாய் - 2,
    தேங்காய்த் துருவல் - கால் கப்,
    எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்,
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    தாளிக்க :

    கடுகு - 1 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - 1 கொத்து,
    பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
    கடலை, உளுத்தம் பருப்பு - தலா 1 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழைக்காயைத் தோல் சீவாமல் மூன்று துண்டுகளாக அரிந்து உப்பு போட்டு வேகவைத்துக்கொள்ளுங்கள்.

    வாழைக்காய் வெந்ததும் தோலை உரித்துவிட்டுச் துருவிக்கொள்ளுங்கள்.

    வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டுக் கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்துத் தாளியுங்கள்.

    பின்னர் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கிக்கொள்ளுங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் துருவி வைத்துள்ள வாழைக்காய், தேங்காய்த் துருவல் இரண்டையும் சேர்த்து வதக்குங்கள்.

    மசாலாவுடன் வாழைக்காய் நன்றாகக் கலந்ததும் இறக்கிவைத்து எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.

    சூப்பரான வாழைக்காய் பொடிமாஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×