search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    புலாவுக்கு சூப்பரான வாழைக்காய் கோப்தா
    X

    புலாவுக்கு சூப்பரான வாழைக்காய் கோப்தா

    வாழைக்காயில் பஜ்ஜி, வறுவல், கூட்டு செய்து சாப்பீட்டு இருப்பீங்க. இன்று வாழைக்காயை வைத்து கோப்தா மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைக்காய் - 1,
    உருளைக் கிழங்கு - 2,
    பச்சை மிளகாய் - 2,
    இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] தனியாத் தூள் - ஒரு டீஸ்பூன்,
    ஆம்சூர் பவுடர் - அரை டீஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - 2,
    பிரெட் தூள் - கால் கப்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
    கொத்தமல்லி - சிறிதளவு

    கிரேவிக்கு

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
    பட்டை - 2 சிறிய துண்டு,
    நறுக்கிய வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் (அரிந்தது) - ஒரு டேபிள் ஸ்பூன்,
    தக்காளி - 2,
    [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்,
    [பாட்டி மசாலா] தனியாத் தூள்
    - 1 டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] சீரகத் தூள் - அரை டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] கரம் மசாலாத் தூள் - கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    முந்திரி - 10,
    வெண்ணெய் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு.



    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழைக்காயைத் தோலுடன் இரண்டாக அரிந்து உப்பு போட்டு வேகவைத்துக்கொள்ளுங்கள்.

    உருளைக்கிழங்கையும் வேகவைத்துக்கொள்ளுங்கள்.

    வேகவைத்து எடுத்த வாழைக்காயையும் உருளைக்கிழங்கையும் தோல் உரித்துத் தேவையான அளவு உப்பு போட்டு மசித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    மசித்தவற்றுடன் அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், வெங்காயம், [பாட்டி மசாலா] தனியாத் தூள், ஆம்சூர் பவுடர், பிரெட் தூள் ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் பிசைந்து வைத்துள்ள கலவையை உருண்டைகளாக பிடித்து போட்டு பொன்னிறமாக பொரித்து கொள்ளவும்.

    முந்திரியைப் பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவையுங்கள். அதனுடன் தக்காளியைச் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள், [பாட்டி மசாலா] மல்லித் தூள், [பாட்டி மசாலா] சீரகத் தூள், [பாட்டி மசாலா] கரம் மசாலாத் தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.

    அடுத்து அதில் அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள்.

    கிரேவி கெட்டியாக வந்ததும் அதன் மேல் வெண்ணெய், கொத்தமல்லி சேர்த்தால் கோப்தாவுக்கான கிரேவி தயார்.

    பொரித்த கோப்தா உருண்டைகளை கிரேவியில் சேர்த்து நன்றாக ஊறியதும் பரிமாறுங்கள்.

    சூப்பரான வாழைக்காய் கோப்தா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×