search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அருமையான குதிரைவாலி கொத்தமல்லி சாதம்
    X

    அருமையான குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

    சிறுதானியங்களில் சத்தான சுவையான பல்வேறு உணவுகளை செய்யலாம். அந்த வகையில் இன்று குதிரைவாலி கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி -  1/2 கப்
    சின்ன வெங்காயம் - கால் கப்
    பெரிய வெங்காயம் - 1
    பூண்டு - 6 பல்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    மிளகு சீரகபொடி - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க


    சீரகம் - அரை டீஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்
    நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்



    செய்முறை :

    சின்ன வெங்காயம், வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வேக வைத்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.

    பிறகு மிளகு சீரகப்பொடி மற்றும் உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டு அடுப்பை அணைத்து விடவும்

    இதனை ஆறவிட்ட குதிரைவாலி சாதத்தின் மேல் கொட்டவும்.

    நெய் விட்டு தேக்கரண்டியல் மென்மையாக கலந்து பரிமாறவும்.

    குதிரைவாலி கொத்தமல்லி சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×