search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    விட்டமின் சி நிறைந்த கிரீன் பட்டர்மில்க் ‌
    X

    விட்டமின் சி நிறைந்த கிரீன் பட்டர்மில்க் ‌

    கோடை வெயிலுக்கு உகந்த விட்டமின் சி நிறைந்தது இந்த கிரீன் பட்டர்மில்க். இன்று இந்த கிரீன் பட்டர்மில்க் ‌செய்முறையை பார்க்கலாம்.‌
    தேவையான பொருட்கள் :

    மோர் - அரை லிட்டர்,
    நெல்லிக்காய் - 5,
    பச்சை மிளகாய் - 2,
    புதினா இலைகள் - 10,
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு,
    பெருங்காயத்தூள் - சிட்டிகை,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி துண்டுகளாக்கவும்.

    புதினா, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    மிக்சியில் நெல்லிக்காய், அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து அரைக்கவும்.

    அடுத்து அதனுடன் மோர் சேர்த்து நைசாக அரைத்து வடிகட்டவும்.

    மண் டம்பளர்களில் ஊற்றி பருகலாம். சுவையான இருக்கும்.

    பலன்கள்: விட்டமின் சி நிறைந்தது. கோடையில் ஏற்படும் சரும பிரச்சனைகளை தீர்க்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×