search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நீரழிவு நோயாளிகளுக்கு உகந்த காய்கறி சூப்
    X

    நீரழிவு நோயாளிகளுக்கு உகந்த காய்கறி சூப்

    நீரழிவு நோயாளிகள் தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று காய்கறிகளை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 1,
    முட்டைகோஸ் - 100 கிராம்,
    கேரட் - 1,
    பீன்ஸ் - 8,
    பச்சை பட்டாணி - 2 டீஸ்பூன்
    பால் - 1 கப்,
    கார்ன் - 2 மே.க,
    பூண்டு - 2 பல்,
    இஞ்சி - 1/2 துண்டு,
    பிரிஞ்சி இலை - 1,
    உப்பு - தேவைக்கேற்ப,
    [பாட்டி மசாலா] மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    வெங்காயம், முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்..

    பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கவும்.

    குக்கரில் நறுக்கிய வெங்காயம், கோஸ், இஞ்சி, பூண்டு, பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்து வேகவிடவும்.

    கேரட், பீன்ஸ், கார்ன், பச்சை பட்டாணியை தனியாக வேகவிடவும்.

    வேகவைத்த காய்கறி கலவையிலிருந்து பிரிஞ்சி இலையை எடுத்து விட்டு, வெங்காயம், கோஸ், இஞ்சி, பூண்டை அரைத்து கொள்ளவும்.

    அரைத்த விழுதில் பால் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

    அடுத்து அதில் வேக வைத்த கேரட், பீன்ஸ், கார்ன், பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    கடைசியாக அதில் [பாட்டி மசாலா] மிளகுத்தூள் சேர்த்து, பரிமாறவும்.

    சூப்பரான சத்தான காய்கறி சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×