search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஓட்ஸ் கோதுமை தோசை
    X

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஓட்ஸ் கோதுமை தோசை

    சர்க்கரை நோயாளிகள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஓட்ஸ் கோதுமை தோசையை சாப்பிடலாம். இன்று இந்த தோசை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - 2 கப்
    கோதுமை மாவு - 2 கப்
    பெரிய வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 3 முதல் 4 வரை
    உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு



    செய்முறை :

    ஓட்ஸை வெறும் வாணலியில் போட்டு இலேசாக சிவக்கும் வரை வறுத்தெடுத்து ஆற விடவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

    ஓட்ஸ் பொடியுடன், கோதுமை மாவு, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீரை விட்டு தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.

    வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி மாவுடன் கலக்கிக் கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, காய்ந்தவுடன், சிறிது எண்ணெய் விட்டு தோசைக்கல்லை துடைத்து விட்டு, ஒரு பெரிய கரண்டி மாவை ஊற்றி பரப்பி விட்டு, சிறிது எண்ணெயை தோசையை சுற்றி ஊற்றி சிவக்க வேக விட்டு, திருப்பிப் போட்டு, மறு புறமும் வெந்த பின் எடுக்கவும்.

    சாம்பார்/சட்னியுடன் பரிமாறவும்.

    சுலபத்தில் செய்யக்கூடிய இந்த தோசை சுவையானது மட்டுமல்ல, சத்தானதும் கூட.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×