search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வரகரிசி - பாசிப்பருப்பு மிளகுச் சாதம்
    X

    வரகரிசி - பாசிப்பருப்பு மிளகுச் சாதம்

    நீரிழிவு நோயாளிகளுக்கு வரகு அரிசி மிகப்பெரிய வரப்பிரசாதம். இன்று வரகரிசி, பாசிப்பருப்பு வைத்து சத்தான மிளகுச் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகரிசி - 250 கிராம்
    பாசிப்பருப்பு - 50 கிராம்
    மிளகு - 10 கிராம்
    சீரகம் - 10 கிராம்
    முந்திரிப்பருப்பு - 50 கிராம்
    இஞ்சி - 1 துண்டு
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - 1 கொத்து
    உப்பு - தேவையான அளவு
    நெய் - 1 ஸ்பூன்
    நல்லெண்ணெய் - 50 கிராம்



    செய்முறை :

    * வரகரிசியையும். பாசிப்பருப்பையும் சேர்த்து கால் மணி நேரம் ஊறவைத்து அலசி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

    * இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெயில் மிளகு, சீரகம் போட்டு கிளறுங்கள்.

    * மிளகு, சீரகம் நன்கு பொரிந்ததும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு போட்டு வதக்குங்கள்.

    * முந்திரிப் பருப்பு பொன்னிறமானதும் முக்கால் லிட்டர் தண்ணீர்விட்டு தேவையான அளவு உப்பு சேருங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் வரகரிசி, பருப்புக் கலவையை போட்டு 20 நிமிடங்கள் வேக விடுங்கள்.

    * இறக்குவதற்கு முன்பு, நெய்யைவிட்டு கிளறி இறக்கி பரிமாறுங்கள்.

    * சூப்பரான வரகரிசி - பாசிப்பருப்பு மிளகுச் சாதம் ரெடி.

    * குக்கரில் வைத்தால் ஒரு விசில் விட்டு தீயை அணைத்து விட்டு 20 நிமிடங்கள் கழித்து திறந்து பரிமாறலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×