search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தமில்லாமல் சுவையுங்கள்.. மொத்தத்தையும் ருசியுங்கள்..
    X

    சத்தமில்லாமல் சுவையுங்கள்.. மொத்தத்தையும் ருசியுங்கள்..

    உணவகங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உள்ளூர் உணவு முதல் உலக பிரசித்தி பெற்ற உணவுகள்கூட நடந்து போய் சாப்பிடக்கூடிய அளவுக்கு அருகே வந்துவிட்டது.
    உணவகங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உள்ளூர் உணவு முதல் உலக பிரசித்தி பெற்ற உணவுகள்கூட நடந்து போய் சாப்பிடக்கூடிய அளவுக்கு அருகே வந்துவிட்டது. இவ்வளவு உணவகங்கள் பெருக முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, உணவுக்காக மக்கள் அதிகமாக செலவிட விரும்புவது. இரண்டு, வித்தியாசமான உணவுகளை மக்கள் சுவைக்க விரும்புவது.

    இன்று, உணவகங்களில் வித விதமாக ஆர்டர் செய்து ருசித்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான விஷயமாகிவிட்டது. எவ்வளவுதான் பிடித்தமான உணவுகளை வீட்டில் சமைத்து சுவைத்தாலும், ரெஸ்டாரண்டுகளில் சாப்பிடுவது தனிக் கொண்டாட்டம் தான்.

    ஆண்களைப் போன்று பெண்களும் வேலைக்கு செல்வதால் ஏற்பட்ட மாற்றம் இது. வேலைக்கு சென்றுவிட்டு தாமதமாகவோ, களைத்தோ வீடு திரும்பும்போது, ‘குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வெளியே சாப்பிட்டால் என்ன?’ என்ற சிந்தனை எழுகிறது. திடீர் விருந்தாளிகள் வரும்போதும், திருமணநாள், பிறந்தநாள் போன்ற முக்கிய விழாக்களை உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாட விரும்பும்போதும் உணவுக்காக ஓட்டல்களை நாடுகிறார்கள். பள்ளி விடுமுறையில் குழந்தைகளை மகிழ்விக்க, நண்பர்களோடு உட்கார்ந்து அரட்டையடிக்கவும் உணவகங்கள் பயன்படுகின்றன.

    இப்போதெல்லாம் ஆண்களும் சுவையாக சமைக்கிறார்கள். காரணம் உணவகங்கள். ஒரு பொருளை சாப்பிடும் போதே, இது எதனால் செய்யப்பட்டது, எப்படி செய்யப்பட்டது என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டே சாப்பிடும் போது அந்த உணவுப் பொருளின் உள்ளடக்கமும், செய்முறையும் தெரிந்துவிடும். பிறகு அதை வீட்டில் செய்துபார்க்கிறார்கள். எதிர்பார்த்த சுவை கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, ஓரளவு அதில் வெற்றிபெற்று மகிழ்ச்சி அடைகிறார்கள். இப்படித்தான் பல பெண்கள் புதிய வகை உணவுகளை சமைக்க கற்றுக் கொள்கிறார்கள். இதனால் உணவகங்களில் சாப்பிடுவது ஒரு படிப்பினையாகிவிடுகிறது. ஒரு சில உணவகங்களில் தங்களது சுவைமிகுந்த ரெசிபிகளை, எப்படி தயாரிப்பது என்று வாடிக்கையாளர் களுக்கு கற்றுக்கொடுக்கவும் செய்கிறார்கள்.

    ஓட்டல்களின் பெயர்கள் மாறினாலும், பெரும்பாலும் உணவுகளுக்கு ஒரே பெயர்தான் வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் ஒரே மாதிரியான பொருட்களைத்தான் சேர்க்கவும் செய்கிறார்கள். ஆனால் சுவையில் மாற்றம் ஏற்படுகிறது. அப்படி சுவை அதிகமுள்ள உணவகங்களில்தான் கூட்டம் சேருகிறது. சாதாரண உணவுப் பொருட்களைக் கொண்டு இப்படி எல்லாம் தயாரிக்க முடியுமா என்று வியக்கும் வண்ணம் உணவகங்கள் வித்தியாசமான உணவுவகைகளை தயாரிக்கின்றன. பாரம்பரிய உணவுகள், கான்டினென்டல், சைனீஷ், கிரேக்கம், இத்தாலி என்று பல்வேறு நாட்டு உணவுகள் இப்போது தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. வட இந்திய, தென் இந்திய உணவுகளும் மக்களை கவர்கிறவே செய்கிறது.

    உணவகங்கள் இப்போது, ‘உணவுத் திருவிழா’வும் நடத்துகின்றன. அப்போது சிறப்புக்குரிய உணவுகள் பலவற்றை சுடச்சுட தயாரித்து மக்களுக்கு கொடுத்து அவர்களை உணவுப்பிரியர்களாக மாற்றிவிடுகிறது. உணவு மட்டும் சுவையாக இருந்தால் போதாது. அவர்கள் உட்கார்ந்து சாப்பிடும் இடத்தின் சூழ்நிலையும், அழகும் அவர்களை ஈர்க்கும் விதத்தில் இருக்கவேண்டும். அதோடு உணவு பரிமாறுகிறவர்களும் இதமாக நடந்துகொள்ளவேண்டும் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. இப்படி எல்லாவற்றிலும் திருப்திபடுத்தும் உணவகங்களே மக்கள் நாவில் மட்டுமல்ல, மனதிலும் இடம் பிடிக்கின்றன. 
    Next Story
    ×