search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    யோகா செய்வதால் குணமாகும் நோய்கள்...
    X

    யோகா செய்வதால் குணமாகும் நோய்கள்...

    உடலில் நோய் ஏற்படுவதற்கு நமது பழக்கவழக்கங்கள் எவ்வாறு காரணமோ, அதேப் போல் நோயை சரிசெய்ய உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும்.
    உடலில் நோய் ஏற்படுவதற்கு நமது பழக்கவழக்கங்கள் எவ்வாறு காரணமோ, அதேப் போல் நோயை சரிசெய்ய உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும். அதிலும் உடற்பயிற்சியை விட யோகாவிற்கு அதிக சக்தி உள்ளது. எப்படியெனில் உடற்பயிற்சி செய்வதால், உடல் எடை தான் குறையும் என்று தெரியும். ஆனால் யோகா செய்தால், ஆஸ்துமா, மூட்டு வலி, நீரிழிவு, முதுகு வலி போன்ற பல நோய்களை குணப்படுத்த முடியும். மன அழுத்தத்தைப் போக்க சிறந்த வழி என்னவென்றால் அது யோகா தான்.
     
    ஆஸ்துமாவை யோகாவினாலேயே சரிசெய்துவிட முடியும். அதிலும் மூச்சுப் பயிற்சிகளில் ஒன்றான பிரணாயாமத்தை தினமும் செய்து வந்தால், நாளடைவில் ஆஸ்துமாவை சரிசெய்துவிட முடியும்.
     
    குணப்படுத்த முடியாத நோய்களில் நீரிழிவும் ஒன்று. ஆனால் யோகாவில் ஒன்றான இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பாலாசனத்தை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.
     
    உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்த முடியும். அதுவும் அதனை நாள்தோறும் பிராணயாமம் செய்து வருவதன் மூலம் சரிசெய்யலாம்.
     
    அஜீரணக் கோளாறு ஒரு பெரிய நோய் இல்லாவிட்டாலும், தற்போது வேலை செய்வோருக்கு, இந்த பிரச்சனை அதிகம் உள்ளது. இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு மருந்துகள் இருப்பினும், இங்கு காண்பிக்கப்பட்டுள்ள பாலாசனத்தை செய்து வருவதன் மூலம் நீக்க முடியும்.
     
    போதிய இரத்த சுழற்சி உடலில் இல்லாததால், மூளைக்கு செல்லும் இரத்தத்தின் ஓட்டம் குறைவாக இருக்கும் போது ஒற்றைத் தலைவலியானது ஏற்படுகிறது. எனவே உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதற்கு சிரசாசனம் செய்ய வேண்டும்.
     
    கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோர் பலர் பாதிக்கப்படும் பிரச்சனைகளுள் முக்கியமானது முதுகு வலி மற்றும் மூட்டு வலி. இத்தகைய முதுகு வலியைப் போக்க சூரிய நமஸ்காரத்தில் வரும் நிலைகளை செய்து வர வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
     
    பிரச்சனை கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து உண்டாகும் ஒரு பிரச்சனை தான் கல்லீரல் கொழுப்பு நோய். இந்த கொழுப்புகளை கரைத்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, மிகவும் அடிப்படை யோகா நிலையான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் யோகாசனத்தை செய்ய வேண்டும்.
    Next Story
    ×