search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மனதை ஒருமுகப்படுத்தும் நமஸ்காராசனம்
    X

    மனதை ஒருமுகப்படுத்தும் நமஸ்காராசனம்

    இந்த ஆசனநிலை மனதை ஒருமுகப்படுத்தும். இப்பயிற்சியினால் நன்றாக நிமிர்ந்து நடக்கும் பழக்கம் உண்டாகும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    பெயர் விளக்கம் : ‘நமஸ்கார’ என்றால் வணக்கம் என்றும் ‘ஆசனம்’ என்றால் குறிப்பிட்ட நிலையில் அசையாமல் இருப்பது என்றும் பொருள். இந்த ஆசனத்தில் வணங்கும் நிலையில் இருப்பதால் நமஸ்காராசனம் என்று பெயர் அமைந்துள்ளது.

    செய்முறை : நேராக நிமர்ந்து நிற்கவும். பாதம் இரண்டும் சேர்ந்திருக்கட்டும். இப்போது நிதானமாக முழங்கால்களை மடக்கி இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக சேர்த்து மார்பின் நடுப்பகுதியில் ஒட்டியபடி கை கட்டை விரல்களை வைக்கவும். கண்களை மூடவும். உடல் முழுவதும் தளர்வாக இருக்கட்டும்.
    இந்நிலையில் சாதாரண மூச்சுடன் இருக்கவும். அல்லது மூச்சை வெளியே விடவும் சூரியனை நினைத்து இந்த ஆசன நிலைக்கு உரிய மந்திரத்தைக் கூறி இந்த ஆசன நிலைக்கு உரிய சக்கரத்தை மனதால் நினைக்கவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம் : உடலை தளர்த்துவதின் மீதும் அறைவுத் சக்கத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு : கதிர்களற்ற உதயகால சூரியனை மட்டும் கண்களால் பார்த்தபடி இந்த ஆசன நிலையை செய்யலாம். கைகளின் மணிக்கட்டுகளுக்கு நேராக முழங்கைகள் இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.

    தடைகுறிப்பு : உதயமாகி சூரிய கதிர்கள் அதிகமாக இருக்கும்போது கண்களால் சூரியனை பார்த்தபடி செய்யக்கூடாது. இதனால் கண்கள் பாதிப்படையும்.

    பயன்கள் : இந்த ஆசனநிலை மனதை ஒருமுகப்படுத்தவும், இனிவரும் ஆசனங்களை செய்வதற்கும் நம்மை தயார்படுத்தவும் உதவுகிற தோள்பட்டை, முழங்கைகள், மணிக்கட்டுகள், வலுவடையும், நடக்கும் போது கோணலாக உடலை வைத்துக் கொண்டு நடப்பவர்கள். இப்பயிற்சியினால் நன்றாக நிமிர்ந்து நடக்கும் பழக்கம் உண்டாகும்.
    Next Story
    ×