search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சத்தாபரணம்
    X

    எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சத்தாபரணம்

    எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சத்தாபரணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    எடப்பாடியில் தேவகிரி அம்மன் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் திருவிழா நடந்தது. இந்த திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி அனைத்து சமூகத்தினர் சார்பில், கட்டளைதாரர்களால் தினமும் சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், சாமி வீதிஉலா ஆகியவை நடைபெற்றது.

    இதையடுத்து கடந்த 20-ந்தேதி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதைத்தொடர்ந்து 3 நாட்களாக தேர் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டு பவானி ரோட்டில் நிறுத்தப்பட்டது.

    பின்னர் விநாயகர், தேவகிரி அம்மன், பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர், வள்ளி-தெய்வானை, முருகன் தேர்கள் இழுக்கப்பட்டு நிலை சேர்க்கப்பட்டது. அப்போது விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களையும், வியாபாரிகள் பழங்களையும் தேர்மீது வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தேர்நிலை சேர்ந்ததும் கோவில் முன்பு பக்தர்களுக்கு நீர் மோர், பழரசம் வழங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து நாடார் சமுதாய மகாஜனங்களின் சார்பில் சத்தாபரணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×