search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
    X

    பழனி லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

    பழனி மேற்கு ரத வீதியில் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவையொட்டி கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.
    பழனி மேற்கு ரத வீதியில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பழமையான இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கோவிலில் 6 கலசங்கள் வைக்கப்பட்டு, கலச பூஜை நடந்தது.

    தொடர்ந்து கொடிப்படம், கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. கொடியேற்றத்தை காண லட்சுமி நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சன்னதி வீதியில் எழுந்தருளினார். பின்னர் கொடிப்படம் உள்பிரகாரம் சுற்றி கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா...கோவிந்தா... என சரண கோஷம் எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் செந்தில்குமார், செயற்பொறியாளர் சக்திவேல், கோவில் கண்காணிப்பாளர் முருகேசன், கந்தவிலாஸ் செல்வகுமார் மற்றும் உபயதாரர்கள் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×