search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவில் திருவிழா
    X

    கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவில் திருவிழா

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடைவீதியில் பிரசித்திப்பெற்ற மாரியம்மன் இக்கோவிலின் திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடைவீதியில் பிரசித்திப்பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் திருவிழாவை கொண்டாடி வருகிறார்கள்.

    இதனை தொடர்ந்து அம்மனுக்கு நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. கோத்தகிரி வட்டாரா மகளிர் மன்றம் சார்பில் மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    கோவில் அர்ச்சகர்கள் குழந்தைவேல், சக்திவேல் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். அதனை தொடர்ந்து மங்கல பூஜை நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து மாங்கல்ய பூஜை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட காமதேனு வளாகத்தில் அம்மன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விநாயகர் கோவில் இருந்து பக்தர்கள் 108 பால் குடங்கள் மற்றும் முலைப்பாரிகளுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலம் கடைவீதி, காம் பாய் கடை, பஸ்நிலையம் வழியாக கோவிலை வந்து அடைந்தது. இங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பிறகு அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் அம்மன் முக்கிய வீதி வழியாக திருவீதி உலா கோவிலை வந்து அடைந்தது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு சமூகத்தினரும் மாரியம்மன கோவில் திருவிழாவை சிறப்பாக தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
    Next Story
    ×