search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி கொடியேற்றப்பட்ட போது எடுத்த படம்.
    X
    பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி கொடியேற்றப்பட்ட போது எடுத்த படம்.

    பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது

    பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பேராவூரணி முடப்புளிக்காடு பகுதியில் ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கோவிந்தராசு எம்.எல்.ஏ., நிர்வாகஅதிகாரி, முடப்புளிக்காடு கிராமத்தார்கள், சங்கரன் வகையறாக்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 12 நாட்கள் வண்ண மயில் வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், மயில் வாகனம், ரிஷபவாகனம் என பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெற உள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 28-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் பால்காவடி, பன்னீர்காவடி, அக்னி காவடி, தொட்டில் காவடி, பறவைகாவடி என பல்வேறு காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர். அன்றையதினம் மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.

    தேரோட்டத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் தேரில் எழுந்தருள உள்ளார். இதில் பேராவூரணி மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொள்ள உள்ளனர். 29-ந் தேதி தீர்த்தவாரியும், 30-ந் தேதி திருக்கல்யாணமும், அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி டி.கோவிந்தராஜூ, முடப்புளிக்காடு கிராமத்தார்கள், ஸ்தானிகர்கள், சங்கரன் வகையறாக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×