search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அரிஞ்சிகை ஈஸ்வரன் கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் காட்சி.
    X
    அரிஞ்சிகை ஈஸ்வரன் கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் காட்சி.

    அரிஞ்சிகை ஈஸ்வரன் கோவிலில் சிவலிங்கத்தின் மேல் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு

    மேல்பாடி அரிஞ்சிகை ஈஸ்வரன் கோவிலில் சிவலிங்கத்தின் மேல் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு தொடங்கியது. 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    மேல்பாடி அருகே பொன்னை ஆற்றின் மேற்கு கரையில் பராந்தக சோழ மன்னரால் அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சோமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. பராந்தக சோழனால் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இருந்த இந்த கோவிலின் சில பணிகள் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற ராஜராஜசோழனால் முடிக்கப்பட்டது. ராஜராஜசோழனின் தாய்வழிப்பாட்டனார் அரூர் துஞ்சியதேவன் என்பவர் கி.பி.1014-ல் நடைபெற்ற ஒரு போரில் வீரமரணமடைந்தார். அவரின் நினைவாக சோமநாத ஈஸ்வரர் கோவிலின் எதிர்புறத்தில் அரிஞ்சிகை ஈஸ்வரன் கோவில் கட்டப்பட்டது.

    பழமை வாய்ந்த இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது ஆண்டு தோறும் 2 முறை சூரிய ஒளி விழுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 முதல் 24-ந் தேதி வரையிலும், செப்டம்பர் 21 முதல் 24-ந் தேதி வரையிலும் சூரிய ஒளி இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது விழுகிறது.

    இந்த ஆண்டு சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் அதிசய நிகழ்வு நேற்று காலை 6.32 மணி முதல் 6.50 வரை சூரிய ஒளி வாசல் வழியாக வந்து லிங்கத்தின் மீது விழுந்தது. பின்னர் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு 24-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது.
    Next Story
    ×