search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் மாசி பிரம்மோற்சவம் தொடங்கியது
    X

    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் மாசி பிரம்மோற்சவம் தொடங்கியது

    திருவொற்றியூர் தியாகராஜசாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மாசி பிரம்மோற்சவ விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    திருவொற்றியூர் தியாகராஜசாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும். அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர்களால் பாடப்பட்டது. மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலம் என்பதால் இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இந்த கோவிலில் மாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தியாகராஜ சாமி, வடிவுடையம்மன் அமரவைக்கப்பட்டு கொடிமரம் அருகே எழுந்தருளினர்.

    பின்னர் கொடிமரத்திற்கு பால்அபிஷேகம், மஞ்சள் தண்ணீர் அபிஷேகம் செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தியாகராஜா நமச்சிவாயா என்று பக்தி கோஷமிட்டனர். அதைதொடர்ந்து தியாகராஜ சாமி மாடவீதி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×