search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கல்லறை திருநாள்: கல்லறை தோட்டங்களில் நாளை கிறிஸ்தவர்கள் அஞ்சலி
    X

    கல்லறை திருநாள்: கல்லறை தோட்டங்களில் நாளை கிறிஸ்தவர்கள் அஞ்சலி

    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதியை இறந்தவர்கள் நினைவாக கல்லறை திருநாளாக கடைப்பிடிக்கிறார்கள்.
    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதியை இறந்தவர்கள் நினைவாக கல்லறை திருநாளாக கடைப்பிடிக்கிறார்கள். அன்று, இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களின் கல்லறைகளுக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி மலர் அஞ்சலி செலுத்துவார்கள்.

    இந்த ஆண்டு கல்லறை திருநாள் நாளை (வெள்ளிக் கிழமை) அனுசரிக்கப்படுகிறது. அன்று அனைத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களும் புதுப்பிக்கப்பட்டு சீரமைக்கப்படும். பின்னர் மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி எரியவிட்டு அஞ்சலி செலுத்துவார்கள்.

    அன்று காலையில் கிறிஸ்தவ ஆலயங்களிலும், மாலை 5 மணிக்கு கல்லறை தோட்டங்களிலும் இறந்தவர்களின் நினைவாக திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். இந்த பிரார்த்தனைகளின் போது கல்லறைகளில் பங்கு அருட்பணியாளர்கள் புனித நீர் தெளிப்பார்கள். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.

    கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் ஊர்களில் தற்காலிக பூக்கடைகள் அமைத்து விற்பனை நடைபெறும்.
    Next Story
    ×