search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சினிமாவில் நடிக்க எனக்கு தடையா? வடிவேலு விளக்கம்
    X

    சினிமாவில் நடிக்க எனக்கு தடையா? வடிவேலு விளக்கம்

    இம்சை அரசன் பட விவகாரத்தில் வடிவேலு பிடிவாதமாக இருப்பதால் வடிவேலு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், இதுகுறித்து வடிவேலு விளக்கம் அளித்துள்ளார். #ImsaiArasan #Vadivelu
    இயக்குனர் சங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. இவர்கள் கூட்டணியில் 2007-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் இது.

    சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப் பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவி னருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

    இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. பல முறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு தரப்பிலிருந்து எந்த பதிலுமே இல்லை. நீண்ட காலமாக இப்பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் சங்கம் விவாதித்து வந்தது .

    இறுதியாக இயக்குனர்கள் சங்கம், பெப்சி, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினர். இதில் தயாரிப்பாளர் ‌ஷங்கர் மற்றும் வடிவேலு தரப்பிலிருந்து அவருடைய மேலாளர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து, ‘வடிவேலு எந்தவித நிபந்தனையுமின்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டு முடித்து கொடுக்க வேண்டும் அல்லது இதுவரை செலவழிக்கப்பட்ட தொகை மற்றும் சம்பளத் தொகை அனைத்தும் சேர்த்து வட்டியுடன் அளிக்க வேண்டும்’ என்று முடிவெடுக்கப்பட்டது.



    இந்த முடிவால் வடி வேலு தரப்பினர் அதிர்ச் சியடைந்தனர். தன்னுடைய நிலை குறித்து தயாரிப்பாளர் சங்கத்துக்குக் வடிவேலு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    “இம்சை அரசன் 24 ம் புலிகேசியில் நடிக்க 2016-ம் ஆன்டு ஜூன் 1-ந்தேதியில் ஒப்புக் கொண்டேன். அதே ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் படத்தை முடித்து விடுவதாகவும், அதுவரை வேறெந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால், வேறு படங் களில் நடிப்பதை தவிர்த்தேன்.

    ஆனால், டிசம்பர் 2016 வரை படத்தைத்தொடங்காமலே காலம் தாழ்த்தினர். தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலின் நலன் கருதி, அதன்பிறகும் பல்வேறு தேதிகளில் அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தேன்.

    இந்நிலையில், என்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்பாளரை தயாரிப்பு நிறுவனம் நீக்கியது. அத்துடன், எனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தை கொடுத்து, ஏதோ எனக்கு இந்த ஒரு படத்தின் மூலம்தான் சினிமா உலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

    நான் நடித்துத் தர மறுத்திருந்தால், பட நிறுவனம் டிசம்பர் 2016-க்குள் ஏன் புகார் தரவில்லை? ஒப்பந்தக் காலம் முடிந்து ஒரு வருடத்திற்கு பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, 2016-2017ம் ஆண்டுகளில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக் கொள்ளாமல் இருந் தேன். இதனால் எனக்கு பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டது.

    பொருளாதார, குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் மேற் கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”

    இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.



    ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சினை தற்போது மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. படத்துக்கு செலவழித்த 9 கோடி ரூபாயை அளிக்க வேண்டும் என்று தயாரிப் பாளர் சங்கம் சொன்னதற்கு, வடிவேலு தரப்பில் எந்த ஒரு பதிலுமே வரவில்லை.

    இதனைத் தொடர்ந்து, ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படப்பிரச்சினையை முடிக் கும்வரை, வடிவேலுவை வைத்து எந்த ஒரு தயாரிப் பாளரும் படம் பண்ண வேண்டாம் என்று அறிவுறுத் தியுள்ளது.

    வடிவேலுவுக்கு தயாரிப் பாளர் சங்கம் சினிமாவில் நடிக்க தடை விதித்ததாக கடந்த சில தினங்களாக செய்திகள் வந்தன. இதுகுறித்து வடிவேலுவின் பதில் அறிய அவரை தொடர்புகொண்டபோது அவர் ‘அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வர வில்லை. யாரோ கிளப்பி விட்ட வதந்தி இதுதொடர்பாக எனக்கு இதுவரை எந்த நோட்டீசும் வரவில்லை’ என்றார். #ImsaiArasan #Vadivelu 

    Next Story
    ×