search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய், அஜித் இருவருமே உழைப்பாளிகள் - சங்கவி
    X

    விஜய், அஜித் இருவருமே உழைப்பாளிகள் - சங்கவி

    அஜித், விஜய் இருவரின் ஆரம்பகட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த சங்கவி, அஜித், விஜய் இருவருமே நல்ல உழைப்பாளிகள் என்று கூறினார். #AjithKumar #Vijay #Sangavi
    அஜித், விஜய் இருவரின் ஆரம்பகட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சங்கவி. நீண்ட இடைவெளிக்கு பிறகு கொளஞ்சி படத்தில் நடிக்கிறார். அவரிடம் பேசியதில் இருந்து...

    முதல் படத்தில் அஜித்துடன் நடித்தது நினைவிருக்கிறதா?

    அதை எப்படி மறக்க முடியும்? என் பூர்வீகம் மைசூர். என் குடும்பத்தில் சிலபேர் கன்னட சினிமாவுல இருந்தாங்க. அதனால சின்ன வயசுல இருந்தே சினிமாமேல ஆர்வம் வந்துடுச்சு. சென்னையில் ஒரு நிகழ்ச்சியில என்னைப் பார்த்த இயக்குனர் பாக்யராஜ் சார் அவரோட படத்துல நடிக்க என்னைக் கேட்டார். அப்பா சம்மதம் தராததால் அவருக்கு நோ சொன்னோம். அந்த படம் தான் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி. அப்பாவை சமாதானப்படுத்தி தமிழும், டான்சும் கத்துகிட்டு பாக்யராஜ் சார்கிட்ட திரும்ப வாய்ப்பு கேட்டேன். அவர் படம் தள்ளிப்போனதால கிடைச்ச வாய்ப்பு தான் அமராவதி. தமிழில் எனக்கும், அஜித்துக்கும் இது முதல் படம். அந்த நேரத்துல அஜித் தெலுங்குப் படங்கள்ல தான் நடிச்சுக்கிட்டு இருந்தார்.



    ‘அமராவதி’ படத்துக்கு அப்புறம் எனக்கு உடனே ‘ரசிகன்’ பட வாய்ப்பு வந்துருச்சு. அதுல ஹீரோ, விஜய். எஸ்.ஏ.சி சார் டைரக்ட் பண்ண படம். ‘அமராவதி’ படத்தைப் பார்த்துட்டு என்னை இந்தப் படத்துல கிளாமர் ரோலில் நடிக்கவைக்க எஸ்.ஏ.சி சார் ரொம்பவே யோசிச்சார். ரொம்ப பயந்துதான், என்னை இந்தப் படத்துல நடிக்க வெச்சார். படம் சூப்பர் ஹிட். ‘இனி இந்தப் பொண்ணு கிளாமர் கேரக்டருக்குத்தான் செட் ஆகும்‘னு நிறைய விஜய் படங்கள்ல என்னைக் கமிட் பண்ணாங்க. ‘பொற்காலம்‘ படத்துக்குப் பிறகுதான், மறுபடியும் ஹோம்லி பொண்ணா ஆடியன்ஸ்கிட்ட ரிஜிஸ்டர் ஆனேன். விஜய், அஜித் ரெண்டுபேரும் நல்ல உழைப்பாளிகள். அந்த டைம்ல இருந்த எல்லோருமே, ரெண்டுபேரும் இந்த உயரத்துக்கு வருவாங்கனு எதிர்பார்த்தாங்க. சில சமயம் நடிகர், நடிகைகளின் ரீயூனியன் நடக்கும்போது விஜய்யைப் பார்ப்பேன். ஆனா, அஜித்தைப் பார்த்தே பல வருடமாச்சு.

    தமிழில் நடிச்சுக்கிட்டு இருக்கும்போதே, தெலுங்கிலும் நிறைய படங்கள்ல நடிச்சேன். தமிழில் நான் மிஸ் பண்ண சில நல்ல படங்களைத் தெலுங்கில் நடிச்சேன். ‘பிதாமகன்’ படத்துல சங்கீதா கேரக்டரை தெலுங்குல நான்தான் நடிச்சேன். பிறகு, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குற வாய்ப்பு கிடைச்சது. இப்போ, ‘கொளஞ்சி’ படத்தின் மூலமா தமிழ் சினிமாவுல ரீஎன்ட்ரி கொடுத்திருக்கேன்.

    எனக்குக் கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருடம் ஆச்சு. என் கணவருக்கு தாய்மொழி தமிழ். ஆனால் பெங்களூர் செட்டில் ஆயிட்டார். அதனாலேயே நானும் பெங்களூர் வந்துட்டேன். அழகான அன்பான கணவர். என்றார். #AjithKumar #Vijay #Sangavi
    Next Story
    ×