search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    உதயநிதிக்கு அப்பாவாக நடிக்கும் முக்கிய பிரபலம்
    X

    உதயநிதிக்கு அப்பாவாக நடிக்கும் முக்கிய பிரபலம்

    அறிமுக இயக்குனர் எனாக் இயக்கத்தில் உதயநிதி நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்க மிகவும் பிரபலமானவர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். #Udhayanidhi
    உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நிமிர். யதார்த்தமான கதையாக உருவாகி இருந்த இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. உதயநிதியின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது. அத்துடன் உதயநிதி சினிமா வரலாற்றில் நிமிர் முக்கிய படமாக அமைந்தது. 

    இந்நிலையில் உதயநிதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார்.



    இப்படத்திற்குப் பிறகு உதயநிதி அடுத்ததாக அட்லியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய எனாக் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக ‘மேயாத மான்’ படத்தில் நடித்த பிரியா பவானி சங்கரும், இந்துஜாவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இதில் உதயநிதிக்கு அப்பாவாக நவரச நாயகன் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் முடிந்த பிறகு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. #Udhayanidhi
    Next Story
    ×