search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகர் சங்க கட்டடம் கட்ட ரூ 2.5 கோடி சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் நிதியுதவி
    X

    நடிகர் சங்க கட்டடம் கட்ட ரூ 2.5 கோடி சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் நிதியுதவி

    நடிகர் சங்க கட்டடம் கட்ட ரூ 2.5 கோடி சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் நிதியுதவி வழங்கி உள்ளது. #NatchathiraVizha #Rajinikanth
    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்டு காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கலையரங்கம், சிறிய தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடனம், நடிப்பு பயிற்சி கூடங்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான அறைகள் போன்றவை இங்கு அமைய உள்ளன.

    இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். கட்டிட நிதி திரட்டுவதற்காக ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மேலும் நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி நிதி திரட்டப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி மலேசியாவில் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலை விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்று (6-ந்தேதி) இந்த விழா நடக்கிறது. மலேசிய அரசுடன் இணைந்து தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை இந்த விழாவை நடத்துகிறது. இதில் நடிகர்-நடிகைகள் நடனம், நாடகம், பாடல், நகைச்சுவை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்க உள்ளன.

    இந்நிலையில் நடிகர் சங்க கட்டடம் கட்ட ரூ 2.5 கோடி நிதியுதவியை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் வழங்கி உள்ளது.  மலேசியாவில் நடைபெறும் நட்சத்திர கலை நிகழ்ச்சியில், நிதியுதவியை ரஜினி மற்றும் கமல் பெற்றுக் கொண்டனர்.
    Next Story
    ×