என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சிரஞ்சீவியுடன் நடிக்கும் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் இதுதான்!
Byமாலை மலர்30 Dec 2017 7:43 AM GMT (Updated: 30 Dec 2017 7:43 AM GMT)
தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் சயீரா நரசிம்ப ரெட்டி படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘சயீரா நரசிம்மரெட்டி’. இந்தி நடிகர் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி முதல் முதலாக தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகம் ஆகிறார்.
தமிழ், இந்தி, மலையாளத்திலும் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பாத்திரம் என்ன என்பது இப்போது தெரியவந்துள்ளது. சிரஞ்சீவி நடிக்கும் சயீரா நரசிம்மா ரெட்டி கதாபாத்திரத்தின் வலதுகரமாக இருக்கும் ஒப்பாயா என்ற பாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார்.
சைராவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்தவர் ஒப்பாயா. இது சிரஞ்சீவியுடன் பெரும்பாலான காட்சிகளில் நடிக்க வாய்ப்புள்ள பாத்திரம். எனவே, இது விஜய்சேதுபதிக்கு தெலுங்கு ரசிகர்களிடம் தனி இடத்தை பெற்றுக் கொடுக்கும். இதன்மூலம் விஜய்சேதுபதிக்கு தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Next Story
×