search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தெலுங்கு விற்பனையில் சாதனை படைத்த `பொட்டு
    X

    தெலுங்கு விற்பனையில் சாதனை படைத்த `பொட்டு'

    வடிவுடையான் இயக்கத்தில் பரத் - நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் வெளியாக இருக்கும் `பொட்டு' படத்தின் தெலுங்கு பதிப்பின் விற்பனையில் சாதனை படைத்திருக்கிறது.
    ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் `பொட்டு'.

    வடிவுடையான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் நாயகனாக பரத் நடித்துள்ளார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடித்துள்ளனர். மருத்துவக் கல்லூரி பின்னணியில் பேய் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  

    தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகும் `பொட்டு' படத்துக்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.



    ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனையாவது என்பது அனைத்து படங்களுக்கு அமைவதில்லை. அந்த வகையில் `பொட்டு' படத்திற்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    மனிதர்கள் செய்யும் சாகசங்களை விட, பேய்கள் செய்யும் சாகசங்களுக்கு மக்களிடம் அதிகமாக வரவேற்பு கிடைக்கிறது. தெலுங்கில் பொட்டு படத்தை என்.கே.ஆர். பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது. தெலுங்கில் தணிக்கைக்காக காத்திருக்கும் இந்த படம், தணிக்கை கிடைத்த உடன் எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×