search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ‘பள்ளிப்பருவத்திலே’ நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும்: இயக்குநர்
    X

    ‘பள்ளிப்பருவத்திலே’ நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும்: இயக்குநர்

    ‘பள்ளிப்பருவத்திலே’ படம் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இருக்கும் என்று இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் கூறியிருக்கிறார்.
    வி.கே.பி.டி கிரியே‌ஷன்ஸ் சார்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளிப்பருவத்திலே’.

    இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக வெண்பா நடிக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, ஆர்.கே. சுரேஷ், தம்பி ராமையா, கஞ்சாகருப்பு, பொன்வண்ணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நாயகனின் அப்பாவாகவும், பள்ளிக்கூட தலைமை ஆசிரியராகவும் நடித்துள்ளார். ஊர்வசி குடும்பத் தலைவியாக நடித்திருக்கிறார்.

    வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் பள்ளி மாணவர்களையும், கலகலப்பான குடும்ப சூழலையும் மையப்படுத்தி காமெடி கலந்த காதல் கதையாக உருவாகி இருக்கிறது. படம் குறித்து மனம் திறந்த வாசுதேவ் பாஸ்கர்,



    படம் சில உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகி இருப்பதாக கூறினார். அவரது பள்ளி நாட்களில் அவர் எதிர்கொண்ட விஷயங்களை படத்தில் சேர்த்திருப்பதாகவும், அவை ரசிக்கும்படி இருக்கும் என்றார். படத்தை பார்க்கும் போது நாம் படித்த பள்ளி நடினைவுகள் வரும் என்றும் கூறினார்.

    இந்த படத்துக்கு விஜய் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

    திரையுலகப் பிரபலங்கள் பலரிடமும் பாராட்டுக்களை பெற்ற இந்த படம் டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    Next Story
    ×