என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
`பிரேமம்' இயக்குநரின் அடுத்த படத்தில் இணையும் முன்னணி நடிகர்
Byமாலை மலர்22 Oct 2017 12:03 PM GMT (Updated: 22 Oct 2017 12:03 PM GMT)
அல்போன்ஸ் புத்ரன் அடுத்ததாக இயக்கவிருக்கும் இசை சம்பந்தப்பட்ட படத்தில் நடிக்க சித்தார்த் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
`நேரம்', `பிரேமம்' படங்களை தொடர்ந்து அல்போன்ஸ் புத்ரன் அடுத்ததாக இயக்கவுள்ள படம் இசையை மையப்படுத்தி உருவாக இருப்பதாக முன்னதாக அறிவித்திருந்தார்.
அதற்காக இசை என்னும் கடலில் தனது கால்களை நனைத்து, அதில் நனைந்திருக்கிறேன். இந்த படம் நகைச்சுவை, காதல் கலந்த ஒரு உணர்வுப்பூர்வமான சாதாரண படமாக இருக்கும். ஆனால் `நேரம்', `பிரேமம்' போன்று கண்டிப்பாக இருக்காது என்பதையும் குறிப்பிட்டிருந்தார். இந்த படத்தில் நிவின் பாலி நடிக்கவில்லை. ஆனால் நிவினுடன் மீண்டும் இணைவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து அல்போன்ஸ் தனது அடுத்த படத்தில் யாரை இயக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே நிலவி வந்த நிலையில், ஜெயராமின் மகன் காளிதாஸை புதிய படத்தில் இயக்கவிருப்பதாக முன்னதாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது அது உறுதியாகி இருக்கிறது.
அதுமட்டுமின்றி இந்த படத்தில் அல்போன்ஸ் புத்ரனின் நண்பரும், நடிகருமான சித்தார்த்தும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. காளிதாஸ், சித்தார்த் தவிர்த்து மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு ரெஜேஷ் முருகேஷன் இசையமைக்கிறார்.

Next Story
×