search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் 2019 மசரட்டி குவாட்ரோபோர்ட் அறிமுகம்
    X

    இந்தியாவில் 2019 மசரட்டி குவாட்ரோபோர்ட் அறிமுகம்

    பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மசரட்டி இந்தியாவில் தனது 2019 குவாட்ரோபோர்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. #MaseratiQuattroporte



    இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மசரட்டி இந்தியாவில் 2019 குவாட்ரோபோர்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய 2019 குவாட்ரோபோர்ட் காரின் துவக்க விலை ரூ.1.74 கோடி (கிரான்லூசோ வேரியண்ட்), 2019 குவாட்ரோபோர்ட் கிரான்ஸ்போர்ட் விலை ரூ.1.79 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    கிரான்லூசோ மற்றும் கிரான்ஸ்போர்ட் என இரண்டு வேரியண்ட்களிலும் டர்போசார்ஜ்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. எனினும், மற்ற ஆடம்பர ஸ்போர்ட்ஸ் செடான்களை போன்று இல்லாமல், மசரட்டி குவாட்ரோபோர்ட் 3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 275 பி.ஹெச்.பி. @4000 ஆர்.பி.எம். மற்றும் 600 என்.எம். டார்க் @ 2000-2600 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.

    இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.4 நொடிகளில் எட்டும் என்றும் இது மணிக்கு அதிகபட்சம் 252 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. புதிய குவாட்ரோபோர்ட் கார் ஆட்டோ நார்மல், ஆட்டோ ஸ்போர்ட், மேனுவல் நார்மல், மேனுவல் ஸ்போர்ட் மற்றும் ஐ.சி.இ. (மேம்பட்ட கண்ட்ரோல் மற்றும் செயல்திறன்) என ஐந்து வித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.



    புதிய 2019 குவாட்ரோபோர்ட் கார் பத்துவித நிறங்களில் கிடைக்கிறது. இதில் இரண்டு புதிய டிரை-கோட் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இத்துடன் காரின் முன்பக்கம் பெரிய கிரில் வழங்கப்பட்டுள்ளது. இது அல்ஃபெய்ரி கான்செப்ட் காரை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் முந்தைய மாடலில் இல்லாத வகையில் புதிய பாகங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. 

    இவற்றில் முதன்மையானவைகளாக 8.4 இன்ச் மசரட்டி டச் கண்ட்ரோல் பிளஸ் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்பட்டிருக்கிறது.  

    இத்துடன் ஆக்ஸ்-இன், யு.எஸ்.பி., எஸ்.டி. கார்டு ரீடர் வழங்கப்பட்டுள்ளது. புதிய காரின் கியர்ஷிஃப்ட் லீவர் புதிய தோற்றம் பெற்றிருக்கிறது. இவற்றுடன் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. விரும்பும் வாடிக்கையாளர்கள் 15 ஸ்பீக்கர் பவர்கள் மற்றும் வில்கின்ஸ் செட்டப் பெறலாம். 
    Next Story
    ×