search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரக்கிரீடம் அணி"

    • நாளை மறுநாள் நடக்கிறது
    • மார்கழி மாத பவுர்ணமியையொட்டி நடக்கிறது

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமிதினத்தன்று பகவதி அம்மனுக்கு வைர கிரீடம் அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த மார்கழி மாத பவுர்ணமியை யொட்டி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு வைரக்கிரீடம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    முன்னதாக அதிகாலை 4.30மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் 6 மணிக்கு உஷ பூஜையும் உஷ தீபாராதனையும் நடக்கிறது. அதன் பிறகு நிவேத்தியபூஜையும் ஸ்ரீபலிபூஜையும்நடக்கிறது. அதன்பின்னர் காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், பஞ்சாமிர்தம், களபம், சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து அம்மனுக்கு வைரக் கிரீடம் மற்றும் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் உச்சி கால பூஜையும் உச்சிக்கால அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள்.மாலை 6.30மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடக்கிறது.

    அதன் பிறகு அம்மனை வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின்உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பிறகு வெள்ளி சிம்மாசனத் தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர் ந்து அத்தாழபூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம் மன் கோவில் நிர்வகத்தினர் செய்து வருகிறார்கள்.

    ×