search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாங்கண்ணி மாதா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த திருவிழா அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • விழாவில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்று.

    தமிழகத்தில் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் இந்த பேராலயத்துக்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனர்.

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29-ந் தேதி(தி்ங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இன்றி கொடியேற்றம் மிக எளிமையாக நடந்தது. இந்த ஆண்டு வழக்கம்போல் பக்தர்கள் பங்கேற்புடன் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து விழா முன்னேற்பாடுகளை நாகை மாவட்ட நிர்வாகம், ஆலய நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத்துறை நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    விழாவையொட்டி பேராலய வளாகம் மற்றும் சுற்றுச்சுவர் பகுதி முழுவதும் வர்ணம் பூசப்பட்டு பேராலயம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. மேலும் பேராலயத்தில் வண்ண விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    • வேளாங்கண்ணி பேராலய திருவிழா 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • இந்த திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை நடக்கிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா ஆண்டு திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.

    நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா இந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடக்கிறது. பேராலய திருவிழா காலங்களில் மக்கள் கூட்ட நெரிசல் இன்றி பஸ்களில் பயணம் செய்ய பல்வேறு போக்குவரத்து மண்டலங்களில் இருந்து போதுமான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படும்.

    பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக பஸ் நிறுத்துமிடங்கள் குறித்து தகவல் பலகைகள் வைக்கப்பட உள்ளது. திருடர்களை கண்காணிக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கவும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் கடற்கரையின் அருகில் செல்வதற்கு எல்லை நிர்ணயம் செய்து தடை விதிக்க வேண்டும். மேலும் திருவிழா காலங்களில் கடலில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்படும்.

    வேளாங்கண்ணியில் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அனைத்து உணவு விடுதிகளை ஆய்வு மேற்கொண்டு உணவின் தரத்தை பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகள் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ்ஆல்வாஎடிசன், சுகாதார துணை இயக்குனர்விஜயகுமார், பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ், உதவி பங்குத்தந்தை ஆண்டோஜேசுராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி மற்றும் விடுதி உரிமையாளர்கள் சங்கம், வர்த்தக சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    • ஆகஸ்டு 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்.
    • முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி செப்டம்பர் 7-ந்தேதி நடைபெறுகிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படுகிறது.

    இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை இந்த பேராலயம் பெற்று விளங்குகிறது.

    இந்த பேராலயம் வங்க கடலோரம் அமைந்திருப்பதால் மேலும் சிறப்பு பெற்றுள்ளது. இந்த ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    பல்வேறு சிறப்பு பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். அதன்படி ஆகஸ்டு 29-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி செப்டம்பர் 7-ந்தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்காக பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆண்டு பெருவிழாவை முன்னிட்ட பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி நடைபெறுகிறது. இதற்காக பேராலயத்தில் சாரம் அமைக்கப்பட்டு வருகிறது.

    • கெபியில் 10 நாள் திருவிழாவும் தொடங்கியது.
    • 6-ந்தேதி காலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது

    அழகப்பபுரத்தில் புனித வேளாங்கண்ணி மாதா கெபி புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. இதற்கு பங்கு பேரவை துணைத் தலைவர் விக்டர் நவாஸ், உதவி பங்குத்தந்தை ஜார்ஜ் அந்தோணி, செயலாளர் ஞானம், பொருளாளர் டேவிட் ஜெபராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுப்பிக்கப்பட்ட புனித வேளாங்கண்ணி மாதா கெபியை பங்குத்தந்தை செல்வராயர் அர்ச்சித்து திறந்து வைத்தார். திறப்பு விழாவில் பங்கு இறை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து கெபியில் 10 நாள் திருவிழாவும் தொடங்கியது ஜெபமாலை மன்றாட்டு மாலையும், திருப்பலியும் நடந்தது. தினமும் மாலையில் ஜெபமாலை மன்றாட்டு மாலை நடைபெறுகிறது. 10-ம்நாள் திருவிழா வருகிற 6-ந்தேதி காலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது மாலை 6.30 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராயர், உதவி பங்குத்தந்தை ஜார்ஜ் அந்தோணி, பங்கு பேரவை துணைத் தலைவர் விக்டர் நவாஸ், செயலாளர் ஞானம், பொருளாளர் டேவிட் ஜெயராஜ், பங்கு பேரவையினர், திருச்சபை அருட்சகோதரிகள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    • இந்த விழா 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
    • வருகிற 15-ந்தேதி விழா நிறைவடைகிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. பிரசித்திப்பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் உத்திரியமாதா திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழாவானது நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. வருகிற 15-ந் தேதி விழா நிறைவடைகிறது. கொடியேற்றத்தையொட்டி நேற்று வேளாங்கண்ணி பேராலயத்தில் இருந்து கொடி பவனி புறப்பட்டது.

    கடற்கரை சாலை, ஆரியநாட்டுசாலை வழியாக நடைபெற்ற பவனி, மீண்டும் பேராலயத்தை அடைந்தது. அங்கு பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் கொடி புனிதம் செய்யப்பட்டு பேராலயத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் ஏற்றிவைக்கபட்டது.

    இதில் பங்குத்தந்தை அற்புதராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட்தனராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் அருள் சகோதரர்கள், சகோதரிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மாதாவை தரிசனம் செய்தனர் .விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

    ×