search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றிலை விலை வீழ்ச்சி"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்க ணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்றவற்றை பயிர் செய்துள்ளனர்.
    • உற்பத்தி அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, குப்பிச்சி பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, அண்ணாநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்றவற்றை பயிர் செய்துள்ளனர். இந்த வெற்றிலைகளை பறித்து, உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிக ளுக்கும், பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்தி வேலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

    வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியா பாரிகள் வந்து, தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கி லாரிகள் மூலம் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், உத்த ராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் 104 கவுளி கொண்ட இளம் பயிர் வெள்ளைக்கொடி வெற்றிலை, ஒரு சுமை ரூ.8,500-க்கும், இளம் பயிர் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.3,500-க்கும் விற்பனையானது. முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.4,000-க்கும் , முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.2000-க்கும் விற்பனையானது.

    இந்த வாரம் 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.6000-க்கும், இளங்கால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.2,000-க்கும் விற்பனையானது. முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.3,000-க்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.1000-க்கும் விற்பனையானது. உற்பத்தி அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ×