search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை"

    • வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கரூர் ரெயில் - பஸ் நிலையங்களில்

    கரூர்:

    கரூர் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்டில், வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீசார், திடீரென சோதனை நடத்தினர்.

    கடந்த 22-ந் தேதி பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின், அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில், தேசிய புலனாய்வு நிறு வனம் (என்.ஐ.ஏ.) திடீர் சோதனை நடத்தியது. அதை தொடர்ந்து, தமிழகத்தில், சட்ட விரோதமாக செயல்பட்டு வந்ததாக, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதை கண்டித்து, கன்னியாகுமரி, சேலம், கோவை மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங் களில் பா.ஜ.க, அலுவலகம், இந்து அமைப்புகளின் வீடுகள், அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகளை மர்ம நபர்கள் வீசிவருகின்றனர்.

    இதையடுத்து, தமிழகத்தில் உள்ள பா.ஜ.க, அலுவலகங்கள், இந்து அமைப்புகளின் அலுவலகங்கள், முக்கிய நிர்வாகிகளின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கரூர் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவுப்படி வெடி குண்டு தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார், கரூர் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் தலைவர்கள் சிலைகள் அமைந்துள்ள பகுதிகளில், மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் திடீரென சோதனை நடத்தினர். இதனால் அந்தப் பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×