search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவேகானந்தர்"

    • காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி:

    புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக் கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையை யொட்டி கடந்த 6 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் கன்னியாகுமரி களை கட்டியது.

    இந்த 6நாட்கள் தொடர் விடுமுறையிலும் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக இருந்தனர். அந்த அடிப்படையில் கன்னியாகுமரியிலும் காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    இன்றும் கன்னியா குமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதி காலையில் சூரியன் உதய மாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதி காலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந் தனர்.அவர்கள் காலை 8மணியில் இருந்து படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் கன்னியா குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலா தளங்கள் களை கட்டியது.

    இந்தசுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாது காப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதி யில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர். கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையில் கடந்த ஆறு நாட்களில் மட்டும் 50 ஆயிரத்து 546சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுஉள்ளனர்.

    • கன்னியாகுமரியில் கோவா கவர்னர் பேச்சு
    • விழா முடிவில் பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த 52-வது ஆண்டு விழா மற்றும் சுவாமி விவேகானந்தர் 1893 -ம் ஆண்டில் சிக்காகோநகரில் நடைபெற்ற சர்வ தர்ம சபையில் அனைவரையும் ஒன்று சேர்த்து உலக சகோதரத்துவத்தை உரு வாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்த ஆன்மாவை தட்டி எழுப்பும் சொற்பொழிவு ஆற்றியதை நினைவு கூறும் விழா கன்னியாகுமரி விவே கானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தர கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தா சபாக்கிரகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    விழாவுக்கு கன்னியா குமரி விவேகானந்தா கேந்திர தலைவர் பால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். விவேகானந்தா கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் வந்தே மாதரம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து பாடினார்கள். பள்ளி துணை முதல்வர் சஞ்சீவி ராஜன் வரவேற்று பேசினார். பள்ளி முதல்வர் சரிகா ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். பின்னர் கோவா மாநில கவர்னர் பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய திருநாடு 3 முக்கியமான நாகரீகங்களை கொண்ட நாடாகும். இந்த உலகத்தில் மனித தன்மையுள்ள மக்கள் எங்கு வாழ்கிறார்கள் என்றால் அது நமது பாரத திருநாட்டில் தான் வாழுகிறார்கள். சுவாமி விவேகானந்தருடைய கருத்துக்களை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் எதிர்கால மாணவர்களுக்கு சுவாமி விவேகானந்தர் உடைய கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் தெரியவரும். சுவாமி விவேகானந்தரின் கொ ள்கைகளை மாணவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்ற அடி ப்படையில் ஒற்றுமையாக வாழ்கி றார்கள். இந்த உலக த்தில் வேறு எந்த நாட்டிலும் இந்த ஒற்றுமையை பார்க்க முடியாது. இந்த உலகத்தின் மிகச்சிறந்த வளமான நாடு இந்தியா. அதனால்தான் அந்த காலத்தில் செல்வ வளம் மிகுந்த நமது நாட்டை கொள்ளையடிக்க ஆங்கிலேயர்கள் வந்தார்கள். சுவாமி விவேகானந்தர் பாறை நினைவாலயத்தை உலகில் உள்ள அனைவரும் பார்த்து அதன் மகிமையை உணர வேண்டும். உக்ரைன் போரில் நடந்த நிகழ்வின் மூலம் இந்திய தேசியக் கொடியின் பெருமையை நாம் தெளிவாக உணர வேண்டும். நம்முடைய தேவையை நாமே நிறைவேற்ற வேண்டும். இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு கோவா கவர்னர் பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை பேசினார். பின்னர் கோவா கவர்னர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை விவேகானந்த கேந்திராவுக்கு ரூ.1 லட்சத்துக்குரிய காசோலையை விவேகா னந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ண னிடம் வழங்கினார். முடிவில் பள்ளி முதல்வர் சரிகா நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை ஆசிரியை ஜெயா தொகுத்து வழங்கினார்

    விழா முடிவில் பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    சின்னமுட்டம் துறைமுகத்தில் கரையேற்றி பழுது பார்க்கும் பணி தீவிரம்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுஉள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இந்தநிலையில்தற்போது திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவைபூசி பராமரிப்பதற்காக இரும்பு பைப் கம்பிகளால் சாரம் கட்டும் ஆரம்பக்கட்டபணிகள் நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு மட்டும் தற்போது படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் விவேகானந்தா படகு கடலில் ஓடுவதற்கான காலக்கெடு முடிந்து விட்டதால் அதனை கரையேற்றிரூ.25 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.

    இதைத்தொடர்ந்து விவேகானந்தா படகு கன்னியாகுமரியில்உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் இருந்து கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு அந்த விவேகானந்தா படகு கரையேற்றப்பட்டு ரூ. 25 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த படகு பராமரிக்கும் பணி முடிவடைவதற்கு இன்னும் 2மாத காலம் ஆகலாம் என்று தெரிகிறது.

    இந்த படகு பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு விவேகானந்தா படகு புதுபொலிவுடன் கடலில் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்படும். அதன் பிறகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்படுகிறது.

    • இந்திய ராணுவ வீரர்கள் பங்கேற்ற 75-வது சுதந்திர தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
    • 75- வது சுதந்திர தின விழாவை குறிக்கும் வகையில் 75 ராணுவ வீரர்களும் தங்களது கையில் தேசியக் கொடியை ஏந்தி மரியாதை செலுத்தினர்

    கன்னியாகுமரி :

    இந்தியாவின் 75- வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மத்திய- மாநில அரசுகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் 75-வது சுதந்திர தின விழாவை குறிக்கும் வகையில் வெவ்வேறு நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக இந்திய ராணுவ வீரர்கள் பங்கேற்ற 75-வது சுதந்திர தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இன்று காலை நடந்தது. இதையொட்டி 75 ராணுவ வீரர்கள் கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் இருந்து தனி படகு மூலம் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்றனர்.

    அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் முன்பு 75- வது சுதந்திர தின விழாவை குறிக்கும் வகையில் 75 ராணுவ வீரர்களும் தங்களது கையில் தேசியக் கொடியை ஏந்தி மரியாதை செலுத்தினர். இது தவிர 75 அடி நீளமும் 30 அடிஅகலமும் கொண்ட ராட்சத தேசிய கொடியை விவேகானந்தரின் நினைவு மண்டபம் முன்பு ராணுவ வீரர்கள் பிடித்தபடி நின்றனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவ கமாண்டர் பிரிகேடியர் லெப்டினென்ட் சர்மா தலைமையில் 75 ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

    ×