search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 75 அடி நீள தேசிய கொடியை ஏந்திய ராணுவ வீரர்கள்
    X

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 75 அடி நீள தேசிய கொடியை ஏந்திய ராணுவ வீரர்கள்

    • இந்திய ராணுவ வீரர்கள் பங்கேற்ற 75-வது சுதந்திர தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
    • 75- வது சுதந்திர தின விழாவை குறிக்கும் வகையில் 75 ராணுவ வீரர்களும் தங்களது கையில் தேசியக் கொடியை ஏந்தி மரியாதை செலுத்தினர்

    கன்னியாகுமரி :

    இந்தியாவின் 75- வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மத்திய- மாநில அரசுகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் 75-வது சுதந்திர தின விழாவை குறிக்கும் வகையில் வெவ்வேறு நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக இந்திய ராணுவ வீரர்கள் பங்கேற்ற 75-வது சுதந்திர தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இன்று காலை நடந்தது. இதையொட்டி 75 ராணுவ வீரர்கள் கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் இருந்து தனி படகு மூலம் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்றனர்.

    அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் முன்பு 75- வது சுதந்திர தின விழாவை குறிக்கும் வகையில் 75 ராணுவ வீரர்களும் தங்களது கையில் தேசியக் கொடியை ஏந்தி மரியாதை செலுத்தினர். இது தவிர 75 அடி நீளமும் 30 அடிஅகலமும் கொண்ட ராட்சத தேசிய கொடியை விவேகானந்தரின் நினைவு மண்டபம் முன்பு ராணுவ வீரர்கள் பிடித்தபடி நின்றனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவ கமாண்டர் பிரிகேடியர் லெப்டினென்ட் சர்மா தலைமையில் 75 ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×