search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் பயன் அடையலாம்"

    • வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சி துறை ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலதிட்ட உதவிகள் குறித்து விவசாயி களுக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
    • கண்காட்சியில் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல், புதிய தொழில்நுட்பங்கள், செயல்விளக்கங்கள், புதிய ரகங்கள், வேளாண் எந்திரங்கள், மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரி க்கும் தொழில்நுட்பங்கள், உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அடங்கிய கண்காட்சி நடைபெற உள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டம் போடி வர்த்தகர் சங்க பொன்விழா மண்டபத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சி துறை ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலதிட்ட உதவிகள் குறித்து விவசாயி களுக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

    2021-22-ம் ஆண்டிற்கான கலைஞர் திட்டத்தில் தேர்வு செய்யப்ப ட்ட 13 கிராம ஊராட்சிகளில் 25 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டதில் 19 ஆழ்துளை கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்க ப்பட்டு, நுண்ணீர்பாசனம் அமைக்கப்பட்டு 158.34 ஏக்கரில் மா, பெருநெல்லி மற்றும் எலுமிச்சை போன்ற பழமரக்கன்றுகள் நடவு செய்து சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டு ள்ள தாக தெரிவிக்கப்பட்டது.

    2022-23-ம் ஆண்டிற்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 5 கிராம ஊராட்சிகளில் 5 ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்து நுண்ணீர்பாசனம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2023-2024 ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 26 கிராம ஊராட்சிகளில் இதுவரை 1,500 பயனாளிகளுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் 3,000 கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள அனை த்து குடும்பங்களுக்கும் ஒரு குடும்பத்திற்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    தேசிய உணவு எண்ணெய் இயக்கம் திட்டத்தில் எண்ணெய் வித்து மரக்கன்றுகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளது. வேம்பு கன்றுகள் (ஒரு எக்டருக்கு 400 எண்கள்) நடவு செய்ய ரூ.17,000-ம், புங்கன் (ஒரு எக்டருக்கு 500 எண்ணிக்கை) நடவு செய்ய ரூ. 20,000 மற்றும் இலுப்பங்கன்றுகள் (ஒரு எக்டருக்கு 700 எண்கள்) நடவு செய்ய ரூ. 15,000-ம் மானியமாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    வருகிற 27ந் தேதி முதல் 29ந் தேதி வரை திருச்சி, கேர் பொறியியல் கல்லூரியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 'வேளாண் சங்கமம்" என்ற பெயரில் வேளாண் கண்காட்சி 2023 நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல், புதிய தொழில்நுட்பங்கள், செயல்விளக்கங்கள், புதிய ரகங்கள், வேளாண் எந்திரங்கள், மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரி க்கும் தொழில்நுட்பங்கள், உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அடங்கிய கண்காட்சி நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள அனைத்து விவசாயிகளும் கண்காட்சிக்குச் சென்று பயனடைய கேட்டுக்கொள்ள ப்பட்டது. மேலும், இக்க ண்காட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் மானிய உதவி பெற திட்ட பதிவு செய்தும் பயன்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உழவன் செயலி மூலம் பதிவேற்றம் செய்து மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து வேளாண்மை துறையின் மூலம் வழங்க ப்படும் மானியங்களை பெற்று பயனடையுமாறும், மேலும் விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகு மாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு தெரிவிக்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    ×