search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு நகரம்"

    • செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம் அமைக்கப்படவுள்ளது.
    • இந்த நகரம் விளையாட்டுப் போட்டிகளின் முனையமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் செம்மஞ்சேரியில் உலகளாவிய விளையாட்டு நகரம் அமைக்கப்பட உள்ளது.

    விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ள, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் சி.எம்.டி.ஏ. ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது.

    விருப்பமுள்ள நிறுவனங்கள் நவம்பர் 14-ம் தேதிக்குள் www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதுடன், முன்னணி விளையாட்டுப் போட்டிகளின் முனையமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது.
    • தமிழ் நாட்டை சார்ந்த வீரர்கள் சர்வதேச தரத்திலான பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றி வாகை சூடுவார்கள்.

    சென்னை:

    அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி வாகை சூட ஏதுவாக, பல்வேறு விளையாட்டுகளுக்காக உலகத்தரத்திலான விளையாட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத்த சென்னைக்கு அருகில் பிரமாண்டமான விளையாட்டு நகரம் அமைக்க சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது.

    இடம் தேர்வு செய்யப்பட்ட பின், விளையாட்டு நகரம் அமைப்பதற்கு உண்டான பணிகள் விரைவில் தொடங்கப்படும். முதற்கட்டமாக 150 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைவதற்கான பணிகள் தொடங்கும். இதன் மூலம், தமிழ் நாட்டை சார்ந்த வீரர்கள் சர்வதேச தரத்திலான பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றி வாகை சூடுவார்கள். விளையாட்டுத்துறையில் பல்வேறு புதுமையான திட்டங்கள் கொண்டு வர இது உறுதுணையாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×